வெள்ளி, 14 அக்டோபர், 2011

அனுஷ்கா:சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு தயங்க மாட்டேன்!நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன் என தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
ஆனால், இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது. நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக