சனி, 29 அக்டோபர், 2011

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!

கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருமருள் ராதிகாவின் மீது பைரப்பாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அனுபவிக்க, பைரப்பா அடிக்கடி சில செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதிக்கவில்லை. இறுதியாக உறவு கொள்ள சம்மதிக்காவிட்டால், உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்து, கை- கால்களை வராமல் செய்துவிடுவேன், என ராதிகாவை மிரட்டி உள்ளார். இதில் பயந்து போன ராதிகா மாமனாரின் ஆசைக்கு இணங்கினார்.

தினமும் காலையில் சுப்பிரமணி டீக்கடைக்கு சென்றுவிடுவது வழக்கம். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா-பைரப்பா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் உல்லாசமாக இருந்த போது, இதை கணவன் சுப்பிரமணியும், உறவினர்கள் சிலரும் பார்த்துவிட்டனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து, பைரப்பாவை அடித்து உதைத்துள்ளார். கையும் களவுமாக சிக்கியதை அறிந்த ராதிகா தனது தாய் வீட்டிற்கு ஓடிவிட்டார். காயமடைந்த பைரப்பா ஓசூர் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சை பெற்று வருகிறார்.

எனக்கும், குழந்தைகளுக்கும் செய்வினை வைத்து விடுவதாக மிரட்டி கடந்த 6 மாதங்களாக மிரட்டி மாமனார் கற்பழித்ததாக, மந்தகிரி போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக