வெள்ளி, 14 அக்டோபர், 2011

முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடையவர் இந்தியாவில் கைது!.


முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முல்லேரியாவில் இடம்பெற்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் கிட்டி உள்ளது.இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கிணங்க அவர்கள் இருவரையூம் 24 மணித்தியாலங்களுக்குள் இந்தியா பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து அவர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தள்ளனர்.

அதன்படி குறிப்பிட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று பிற்பகல் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக