செவ்வாய், 18 அக்டோபர், 2011

காவிரி பிரச்சனை:சொத்து வழக்கின் மீதான கவனத்தை திசை திருப்புவதற்காகவே

சொத்து குவிப்பு வழக்கில் மக்கள் கவனத்தை திசை திருப்ப ஜெயலலிதா முயற்சி: கலைஞர்

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (18.10.2011) செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
ஜெயலலிதா, தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான கவனத்தை திசை திருப்புவதற்காகவே காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக திடீரென அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் கலைஞர் கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்ப்பிக்கை இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளோம்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக