புதன், 12 அக்டோபர், 2011

மன்மோகன்சிங்:பயங்கரவாதத்தை முறியடித்த வகையில் இலங்கையை கடைபிடிக்க வேண்டும்

இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடித்த வகையில் உலகின் ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு அனைத்து நாடுகளும், ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்கியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக இருக்குமாயினும், இந்திய ஏனைய நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள திட சங்கட்பம் பூண்டுள்ளதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக