வியாழன், 6 அக்டோபர், 2011

அன்பழகன்:இந்திய வரலாற்றிலேயே J மிகப்பெரிய குற்றவாளியாகப்

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா: பேராசிரியர் அன்பழகன்

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா என, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து , திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா. டான்சி நில வழக்கில் தனது கையெழுத்தையே மறுத்து பின்னர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டவர்.
தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டிக்கொண்டு அந்த இடத்தை இன்னும் ஒப்படைக்காதவர் ஜெயலலிதா.

கூட்டணிக் கட்சியினரை மூன்று மாதத்திற்குள்ளேயே விரட்டி அடித்து சர்வாதிகாரத்துடன் நடந்துகொண்ட ஜெயலலிதாவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கூட்டணிக் கட்சிக்காரர்கள் ஓடி வந்தார்கள். அந்த அம்மையாரை எதிர்க்க முடியவில்லை. அந்தக் கூட்டணி நிலைக்கவில்லை. என்னக் காரணம் என்றால் அவர்களின் மனப்பாண்மை. எனவே இப்படிப்பட்ட மனப்பாண்மை உள்ள ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்தாலும் கூட, அதை எச்சரிக்கக்கூடிய வகையில், அவர்களுடைய போக்கு சரியில்லை என்பதை உணர்த்தக்கூடிய வகையில், இந்த இடைத்தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக