ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தோட்ட தாய்மாருக்குப் பாலூட்ம் அனுமதி மறுப்பு,பாலைக் கறந்து வைத்துவிட்டு வருமாறு

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஒரு தோட்டத்திலே தோட்ட நிர்வாகத்தின் அத்து மீறல் எல்லை மீறிச் சென்றது. அங்கு தொழில் புரியும் குழந்தை பெற்ற தாய்மாருக்கு உலகில் எங்குமே நடைபெறாத கொடூரம் இழைக்கப்பட்டது. பாலூட்டும் அந்தத் தாய்மாருக்கு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இரண்டு மாதம் கூடச் செல்லாத நிலையில் தாய்மார் தமது குழந்தைகளுக்குத் தேவை யான பாலை கறந்து வைத்து விட்டு இன்னொருவர் மூலமாக அதனைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழில் செய்யும் நேரத்தில் பாலூட்ட முடியாது என கண் டிப்பாக நிர்வாகம் கட்டளையிட்டதனால் சுமார் எட்டுமணி நேரத்திற்கான பாலை கசக்கிப் பிழிந்து தமது இரத்தத்தையும் கலந்து கொடுக்கும் நிலைக்கு அந்தத் தோட் டத்தில் வேலை செய்த ஆறு தாய்மார்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

தோட்டத் தொழில் புரியும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துச் செல்வது வழக்கம். குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக குறித்த நேரத்தில் அவர்களுக்கு லீவு கொடுத்து அனுப்பப்பட வேண்டும். இது பொதுவாக மலையகத்தின் எல்லாத் தோட்டங்களிலும் நடைமுறை யிலுள்ள வழமை.
ஆனால் குறித்த அந்தத் தோட்டத்தில் மட்டும் தாய்மாரின் இந்தச் சலுகை முற்றாக மறு க்கப்பட்டிருந்தது. தோட்ட அதிகாரியின் கட்டளைப்படி குழந்தைக்கான பாலை குறி த்த பெண் போத்தலில் எடுத்து வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். பாலைக் கறந்து வைக்கும் பல சந்தர்ப்பங்களில் பாலுடன் சேர்ந்து இரத்தமும் வந்ததாக அந்தத் தாய்மார் கூறியதைக் கேட்டால் கல் நெஞ்சு கூட ஒரு கணம் கரைந்துவிடும்.
வெளியே சொன்னால் தோட்ட நிர்வாகத்தைக் காட்டிக்கொடுத்ததாகக் கூறி வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ எனும் பயத்தினால் தமது நெஞ்சுகளின் வலிக்குள் ளும் அந்த நெஞ்சிற்குள்ளேயே இக்கொடுமையை அத்தாய்மார் பூட்டி வைத்துவிட் டனர்.
இந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் விடயம் அத்துடன் நின்று விடவில்லை. அந்த ஆறு பாதிக்கப்பட்ட தாய்மாருக்கும் தோட்ட நிர்வாகம் நஷ்டஈடாக தலா ஒரு இலட்சம் ரூபாவை அந்தக் குழந்தை களின் பெயர்களில் வங்கியில் வைப்பிலிட்டுள்ளது. அந்த வங்கிப் புத்தகங்கள் தாய்மாரிடம் வழங்கப்பட்டன.
இப்போதுதான் அந்தத் தாய்மாரின் நெஞ்சுகளில் உண்மையாக பால் சுரக்க ஆரம்பித் துள்ளது. தாய்மையின் சிறப்பையும், மகிமையையும் உணராத நிர்வாகத்தினர் இன்று கூனிக்குறுகி நிற்கின்றனர். இப்போது அந்தத் தாய்மாருக்கு பாலூட்ட நேரம் வழ ங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளிப் பெண்களைக் கிள்ளுக்கீரைகளாக நினைத்த வர்களுக்கு அதை  ஆறு முகன் தொண்டமான் உணர்த்தியுள்ளார்.
அவர் மட்டும் இவ்விடயத்தில் பாராமுகமாக இருந்திருந்தால் இன்று நுவரெலியா தோட் டத்தில் பார்க்கப்பட்ட ஒத்திகை நாளை மலையகத்தின் ஏனைய தோட்டங்களுக்கும் நிச்சயம் பரவியிருக்கும். தொண்டாவின் திடீர் அதிரடி இனி அவர்கள் இது பற்றி நினைத்தாலே பயமெடுக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக