ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சம்பந்தன் மனோ கணேசனுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை?-சம்பந்தன் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம்!

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு ஆதரவளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை தமிழ் மக்களே தீர்மானிக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவளிக்குமாறு கோரியிருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
தமது கட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பெதுச் செயலாளர் நல்லையா குமாரகுருபரன் கோரிய போதிலும், அந்தக் கோரிக்கையை தாம் நிராகரித்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையான கொள்கைகளை வகிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சம்பந்தன் இவ்வாறு கூறினாரா? அல்லது ஜனநயாக மக்கள் முன்னணி அதனை உறுதிப்படுத்தியதா? என்பது குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் மக்கள் தமது கட்சிக்கு போதியளவு ஆதரவினை வழங்குவார்கள் என மனோ கணேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஜனநயாக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக வடக்கு கிழக்கில் பிரச்சாரங்களில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கட்சியின் தலைவர் மனோ கணேசன் நேரடியாக தேர்தல் பிரச்சார மேடைகளில் கூட்டமைப்பிற்கு அதரவாக பிரச்சாரம் செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக