வெள்ளி, 14 அக்டோபர், 2011

பாரதிராஜாவின் புதிய படம் அன்னகொடியும் கொடிவீரனும்


அடுத்தடுத்து தோல்வி படங்களே கொடுத்து வந்த பாரதிராஜா அன்னகொடியும் கொடிவீரனும் என்ற பெயரில் புதிய படம் தயாரித்து இயக்குகிறார். நமகென்னவோ அன்னக்காவடியும் கொடிவீரனும் என்று பாரதிராஜா ஆகிவிடக்கூடாதே என்ற கவலை.
பாரதிராஜா படத்தின் நாயகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார், வாகை சூடவா படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இனியா.
இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பார்த்திபன் ஹீரோவாகநடிக்கிறார். மீனாள் முக்கிய வேடத்தில் வருகிறார்.
படத்தின் நாயகி யார் என்று பாரதிராஜா முடிவு செய்யாமல் இருந்தார். வாகை சூடவா படம் பார்த்த பிறகு, தனது படத்தின் நாயகி என்ற அந்தஸ்தை இனியாவுக்கு வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தலையாய கலைஞர்களில் ஒருவரான பாரதிராஜாவின் படத்தில் நடிப்பது பல நடிகைகளுக்கும் ஒரு கனவு. ஆனால் அந்த வாய்ப்பு வலுவில் வந்திருக்கிறது இனியாவுக்கு.
இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும் என பாரதிராஜா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.ம்ம்ம்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக