வியாழன், 6 அக்டோபர், 2011

தமிழக மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்வது தெரிகிறது- இந்திய கடற்படைத் தளபதி!


கடற்படை அதிகாரிகளின் அறக்கடளை ஆண்டு விழாப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ‘’இந்திய மீனவர்கள் தொடட்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல, இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விஷய்மாக இது உள்ளது.நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இரு நாட்டு அரசுகளும் மீனவப் பிரதிநிதிகளும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது.கடலோரப் பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. 80.90, களில் ஏற்கனவே தமிழகத்திற்கு நிறைய அனுபவம் இருக்கிறது” என்று பேசினார் நிர்மல் வர்மா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக