செவ்வாய், 18 அக்டோபர், 2011

திமுக ஏற்பாடு செய்த வீடியோ படை!

திருவண்ணாமலை நகராட்சியில் சில பூத்துக்களில் அதிமுகவினர் பிரச்சனை செய்ய திட்டமிட்டதை, 16ஆம் தேதி இரவு அறிந்துகொண்டு, உடனடியாக 25க்கும் மேற்பட்ட வீடியோ பதிவாளர்களை சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே திமுக மாவட்டத் தலைமை நிறுத்தி வைத்தது.
அவர்கள் அங்கு அதிமுகவினர் மற்றும் காவல்துறையினர் எதிர்க்கட்சியினரிடம் நடந்துகொண்ட விதம், சில இடங்களில் அதிமுகவினர் செய்த ரகளை போன்றவற்றை பதிவு செய்து 17ஆம் தேதி இரவு திமுக அலுவலத்தில் தந்துள்ளனர்
இதுபற்றி திமுகவினர் ஒருவர் கூறியதாவது, தேர்தல் ஆணையம் நியமிதுள்ள வீடியோ பதிவாளர்கள், ஆளும்கட்சிக்கு ஆதரவாகத் தான் செயல்பட அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பார்கள். அந்த வீடியோ பதிவை நமக்கு தரவும் மாட்டார்கள். அதனாலேயே நாங்கள் தனியாக வீடியோ பதிவாளர்களை நியமித்தோம். இதனால், அதிமுகவினர் பூத்துகளில் வன்முறை செய்ததை குறைத்துக்கொண்டனர்.
இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வீடியோ பதிவாளர்கள் படையை வரும் 19ஆம் தேதி வந்தவாசி, ஆரணி, செய்யாறு நகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவின்போதும், பிரச்சனைக்குரிய மைங்களை கண்டறிந்து இவர்களை அங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக