செவ்வாய், 4 அக்டோபர், 2011

இலங்கை மீனவர்கள் :தமிழக மீனவர்களுக்கு இலங்கைகடலில் மீன்பிடி அனுமதி வழங்ககூடாது

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது- இலங்கைத் தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என இலங்கைத் தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மீனவர் பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் எதிர்வரும் 7ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் தம்மிடம் எவ்வித கருத்துக்களையும் கேட்கவில்லை என யாழ்ப்பாண மீனவ சங்கத்தின் தலைவர் எஸ்.தவரட்னம் தெரிவித்துள்ளார்.

கல்பிட்டி மற்றும் மன்னார் கடற்பகுதியில் அதிகளவு மீன்வளம் காணப்படும் பிரதேசங்கள் எண்ணெய் அகழ்விற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வடக்கு தெற்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் ட்ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் முறுகைக்கற்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக