செவ்வாய், 25 அக்டோபர், 2011

லண்டனில் கத்திக்குத்து! புலத்துப் புலிகளின் ...ம்ம்ம் வீரர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்

லண்டனில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு லண்டன் குரொய்டன் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.ம்ம்ம் வீரர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்  29 வயதான யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தரான அகிலகுமார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இவருக்கு 9 மாதக் குழந்தை உண்டு. இந்தச் சம்பவம் தொடர்பாக பல தரப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் விழா மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த ஆபிரிக்க நாட்டவர்கள் வெளியே சென்ற  அகிலகுமாரை கத்தியால் குத்தியதாக ஒரு தகவலும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களிடையே விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழா தொடர்பான
சர்ச்சைகள் இடம்பெற்றதையடுத்து இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் நடைபெற்றதாகவும் வேறுபட்ட தகவலும் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க லண்டன் மிச்சம் மொடேர்ண் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரான சீபொன் மக்டோனா இவ்விவகாரத்தில் தலையீட்டை ஏற்படுத்தியிருப்பது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது
புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காக விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்டு அவ்வப்போது விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்து வரும் சீபொன் மக்டொனா இந்த மரணம் தொடர்பாக ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டதுடன் இச்சம்பவம் குறித்து தான் தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்க விரும்புவதாகவும் இவ்வாறான மோதல் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க இளைஞர்களின் தாக்குதல் தான் இந்த கத்திக்குத்துக் காரணம் என்று கருதப்படின் தமிழர்களுடனான கலந்துரையாடல் தேவையற்றது. தமிழர்களுடன் கலந்துரையாடலை நடத்த இருப்பதாக சீபொன் மக்டொனா குறிப்பிட்டிருப்பது இந்தச் சம்பவத்துடன் தமிழர்களே தொடர்புபட்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை பிரட்டிஷ் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஒன்று தான் குரோய்டன் நகரில் நடைபெற்ற தமிழர் மீதான தாக்குதல் அல்ல. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆவணி மாதம் நிலாந்தன் மூர்த்தி என்ற 17 வயதான இலங்கைத் தமிழ் இளைஞன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டபோது மௌனம் சாதித்த சீபொன் மக்டொனா அகிலகுமாரின் மரணத்தில் அதீத அக்கறை காட்டுவது லண்டனில் விடுதலைப் புலிகளின் குற்றச்செயல்களை நியாயப்படுத்துவதற்கே என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்
புலம்பெயர் நாடுகளில் கடைப்பிடிக்கப்பட உள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் புலம்பெயர்நாடுகளிலும் குத்துவெட்டுக்களை உண்டாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக