வெள்ளி, 28 அக்டோபர், 2011

சுதர்சன் நாச்சியப்பன் குழு யாழ் விஜயம்

சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை யாழப்பாணம் அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார்!

இந்திய காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன். மேற்குலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சகிதம் யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் பல இடங்களையும் சுற்றிப்பார்த்திருந்தார். யாழ்.செயலகத்திற்கும் குழுவினருடன் விஜயம் செய்த அவருக்கு வழமை போலவே அரச அதிபர் இமெல்டா சுகுமார் புள்ளி விபரங்கள் சகிதம் இலங்கையை அரசின் வடக்கிற்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கி கூறியிருந்தார்.எனினும் அங்கு குறுக்கிட்டு பேசிய யாழ்.மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உண்மை அவ்வாறில்லை என நிராகரித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வகுப்புக்களை பகிஸ்கரித்து வருகின்றனர்.என்றார்.
குறிப்பாக இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றது. இதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் இரு அரசுகளாலும் எடுக்கப்படவில்லையென்றார்.

இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பினில் இரு தரப்பு மீனவர்களும் ஒன்று கூடி பேசுவதை தவிர வேறு வழிகளில்லை எனத்தெரிவித்த சுதர்சன நாச்சியப்பன் தம் நாட்டு மீனவர்களோ சிங்கள மீனவர்கள் தம்மை தாக்குவதாக குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவித்தார்.குழுவினர் குடாநாட்டின் மக்கள் அண்மைக்காலங்களில் குடியமர்ந்த கிராமங்கள் சிலவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக