ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஆயுதங்களை ஒப்படைக்க நக்சலைட்களுக்கு மம்தா ஒரு வாரம் கெ

கொல்கத்தா: ஆயுதங்களை ஒப்படைக்க மாவோ நக்சலைட்களுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராமத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
நான் ஆட்சிக்கு வந்ததும், மாவோ நக்சலைட்களுக்கு எதிரான போலீஸ் கூட்டு நடவடிக்கையை நிறுத்தினேன். அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆயுதம் ஏந்தி போராடுவதில்லை என்ற தங் கள் வாக்குறுதியை மாவோயிஸ்ட்கள் மீறி விட்டனர். அப்பாவிகளை தொடர்ந்து கொன்று குவித்து வருகின்றனர். அண்மையில் கூட ஜங்கிள் மகால் பகுதியில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று  விட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எந்த கொள்கையையும் கிடையாது. கூலிக்கு கொலை செய்கிறார்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். பள்ளிகள், கல்லூரிகள், சாலை வசதி, வேலை வாய்ப்பு தர தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண அரசு தயாராக இருக்கிறது. ஆனால்,  இனியும் வன்முறையும் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது. ஆனால், இன்னும் ஒரு வாரத்துக்குள் மாவோயிஸ்ட்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்களை  ஒப்படைத்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக