வியாழன், 6 அக்டோபர், 2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் வருத்தம் தூக்கில் அரசியல் நடத்தும் வைகோவும் சீமானும்

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மூவர் தூக்கு தண்டனை:மோதிக் கொள்ளும் வைகோ,சீமான்,மரணத்திலும் கட்சி அரசியல் நடத்தும் தமிழக 'உணர்வாளர்கள்!

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கில் அரசியல் நடத்தும்  மூவருக்கும் தூக்கு தண்டணை அறிவிக்கப்பட்டதும்   தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒரே அணியில் கைகோர்த்து போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ் நாட்டில் இதுவே முதல்முறை. சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது.

ஆனாலும் வைகோவும், சீமானும் இந்த விஷயத்தில் தங்கள் அரசியல் தங்கி இருப்பதால் அதிக ஆர்வம் காட்டினர். இருந்தாலும் போராட்டம் தொடர்பான மேடைகளில் இருவரும் இணைந்து கலந்து கொள்ளாதது இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதை உணர்த்தியது. தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக புலம்புகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரில், பேரறிவாளனுக்காக மட்டும் வைகோ பேசுவதாகவும், மற்ற இருவர் குறித்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும் சீமான் தரப்பில் வைகோ மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு ஆதாரமாக வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூக்கு தண்டனை ரத்து தொடர்பாக எழுதிய கடிதத்தையும் காட்டுகிறார்கள் சீமான் தரப்பினர்.

மத்திய அரசு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவை நிராகரித்த உத்தரவை தமிழக அரசுக்கு அனுப்பியது. தமிழக அரசு அந்த விபரத்தை வேலூர் சிறையில் உள்ள மூவருக்கும் அனுப்பிய அன்றே இந்த விஷயத்தில் என்ன செய்வது என டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களோடு கலந்து பேசினோம்'. நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் தடா சந்திரசேகர் வேலூர் சிறைக்குச் சென்று மூவரையும் சந்தித்தார்.

உங்களுக்கு இந்தியாவில் எந்த வழக்கறிஞர் வேண்டுமோ அந்த வழக்கறிஞரை உங்களுக்காக வாதாட அமர்த்துகிறோம்' என்று அவர் மூவரிடமும் வாக்குறுதி அளித்தார். அவர்களுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை வைகோ பார்த்துக் கொள்ளட்டும்' என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகவே நீதிமன்ற நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தோம்.

ஓருவேளை நாங்கள் தூக்கிலிடப்பட்டால் எங்கள் உடல்களை சீமானிடம் ஒப்படையுங்கள்:' என்று முருகனும், சாந்தனும் எழுதிக்கொடுத்துள்ளனர். 'இதில் இருந்தே சீமான் அவர்களுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்' என்று உணர்ச்சி வசப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

தி.மு.க அரசால் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலுர் சிறையில் அடைக்கப்பட்டபோதே முருகன், சாந்தன் உள்ளிட்டோர் தங்களின் வழக்கு குறித்து சீமானிடம் விவாதித்துள்ளனர். அதன் தொடாச்சியாகவே மூவர் தூக்கு தொடர்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

ஆனால், நாம் தமிழர் இயக்கமும், சீமானும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை இருட்டடிப்புச் செய்தவண்ணம் வைகோ செயல்படுகிறார். வைகோவோடு இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் வைகோதான் எங்களுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கம் காட்டுகிறார். இந்த விவகாரத்தில் எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் கிடையாது'.

ஆனால் வைகோ தரப்போ, இதை மறுத்து சீமான் மீது குற்றச்சாட்டு வைக்கிறது. 'சட்ட போராட்டங்களை நடத்தியது நாம் தமிழர் என்பதே பொய்யான வாதம் உச்ச நீதிமனறத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை அழைத்து வந்ததே வைகோதான்'. 'நான் சென்னை வந்தது எனது நன்பர் வைகோவுக்காகத்தான்' என்று நீதிமன்ற வளாகத்திலே ஜெத்மலானி குறிப்பிட்டார்.

மணதண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என்று வைகோ தொடர்ந்து முயற்சிகள் எடுத்த வருகிறார். பேரறிவாளனுக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மற்ற இருவருக்கும் ரத்து செய்யப்படும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசுகிறார். மரண தண்டனை ஒழிப்பு உடன்பாடு உள்ளவர்களோடு இணைந்து செயல்படுவதில் வைகோவுக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆகஸ்ட் 2ம் திகதி சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்கை ரத்துச்செய்ய வலியுறுத்தி நடந்த கூட்டத்தில் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் சீமான் ஒருவர்தான் கலந்து கொள்ளவில்லை.

காஞ்சிபுரத்தில் தூக்கு தண்டனையை ரத்துச் செய்ய வலியுறுத்தி இறந்த செங்கொடியின் வீரவணக்க நிகழ்வில் கூட சீமான் கலந்து கொள்ளவில்லை. கட்சி ஆரம்பித்த சில மாதங்கிளிலேயே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் மூவர் தூக்கு தண்டனை வழக்கை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். இப்படி ஏதாவது செய்துதான் எங்கள் கட்சியை பிரபரப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை' என்று பதிலுக்கு ஆவேசப்படகிறார்கள் ம.தி.மு.க வினர்.

தங்களின் மரண தண்டனை வழக்கை வைத்து வைகோ, சீமான் இருவரும் அரசியல் செய்வதாக சிறையில் இருக்கும் மூவரும் வருத்தப்படுகிறார்களாம்.'பேரறிவாளன் தூக்கு தண்டனையை மட்டும் ரத்துச் செய்யச் சொல்கிறீர்களே, நாங்கள் மட்டும் குற்றம் செய்தோம் என நம்புகிறீர்களா?' என்று முருகனும், சாந்தனும் வைகோ விடம் கேட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

எங்கள் வழக்கு விசாரனை தொடர்பாக வைகோ தெளிவாகத்தான் முடிவெடுப்பார் என்று பேரறிவாளன் சீமானிடம் சொல்ல, அவர் கோபித்துக் கொண்டு வேலூர் சிறையை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறதாம். ஒரு வேளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சீமானிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் முருகனும், சாந்தனும் விண்ணப்பத்தில் எழுதி கொடுத்துள்ளனர். இதை நாம் தமிழர் அமைப்பினர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க? இருவரையும் சீமானே கட்டாயப்படுத்தி கையெழுத்திடச் சொன்னதாக ம.தி.மு.க வினர் சொல்கிறார்கள்.

(நன்றி-ரிப்போட்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக