செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நமது உறவுகள்.


சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 75) ‍ சித்திறெஜினா..! ஒரு 

ஆம்.. அன்று நடந்து முடிந்த அந்த கசப்பான யுத்தம் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு யுத்தம் அல்ல.. அது இலங்கைவாழ் தமிழர்.. சிங்களவர்.. முஸ்லீம்கள் என்ற இனப் பாகுபாடுகளின்றி அனைவரும் தனது துப்பாக்கிக்கு தலை வணங்கித்தான் ஆகவேண்டும் என்ற இறுமாப்பு எண்ணம் கொண்ட‌ ஒரு சர்வாதிகாரியையும் அவனது அறிவிலிக் கூட்டத்தினரையும் அழிப்பதற்காக தொடுக்கப்பட்ட‌ யுத்தம்இந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட‌ அந்த‌ யுத்தத்தில் வேண்டுமென்றே பிரபாகரப் புலிப் பாசிசவாதிகளால் பலி கொடுக்கப்பட்டவர்கள்தான் இந்த அப்பாவிப் பொது மக்கள் என்பதை நடந்து முடிந்த இந்த யுத்தத்தின்போது நடைபெற்ற அனைத்து அசம்பாவிதங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்தவர்கள் நிட்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
பிரச்சினை உனக்கு பிரச்சினை கொடுக்கும் வரை நீ அந்த பிரச்சினையை பிரச்சினைப் படுத்தாதே
ஆனால் வெளி உலகிற்கு தங்களை த‌மிழர்களின் ஏகபோக பிரதிநிதிகளாக‌ காட்டிக் கொண்டு புலிகளின் பாணியை பின்பற்றும் கூட்டமைப்போ இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை முன் வைக்காமல் வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கி அவற்றை ஊதிப் பெரிதாக்குவதன் மூலம் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை மட்டுமே வழர்த்துக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் இவர்களின் உண்மை நிலைஅப்படி இவர்கள் நியாயமான ஒரு கோரிக்கையை முன் வைத்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருந்தாலும் அதற்கு முன்னர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தொட்டதற்கெல்லாம் எதிலும் குறைபிடித்து குற்றப்படுத்தும் தங்கள் குரோத‌ மனப்பான்மையை தூக்கியெறிந்து விட்டு அவர்களுடன் ஒரு நெருக்கமான நட்புறவை வழர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் அதற்குப் பின்னர்தான் அந்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் அதுதான் உண்மையான ராஜ தந்திரம் அப்படி அந்த‌ பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும்போது அதற்கு தன் இலக்கை எட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் தானாகவே உருவாகிவிடும்
அதை விடுத்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விழாக்களை வேண்டுமென்றே இடும்புத்தனமாக‌ பகிஸ்கரிப்பதும்
அவர்களால் நட்பு பூர்வமாக‌ விடுக்கப்படும் அழைப்புகளை அலட்சியமாக‌ உதாசீனம் செய்வதும்
அரசாங்கத்திற்கும் இவர்களுக்கும் இருக்கும் இடைவெளியை மேலும் அதிகரிக்குமே தவிர அரசாங்கத்துடன் நெருக்கிப் பழகும் சந்தர்ப்பங்களை ஒருபோதும் ஏற்படுத்தித் தராது என்பது யதார்த்தமான உண்மையாகும்


அண்மையில்கூட இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌ நவராத்திரி விழாவை இவர்கள் வேண்டுமென்றே பகிஸ்கரித்து தங்கள் குரோத மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது
இப்படியாக இவர்கள் நடத்தும் இந்த சண்டித்தன‌ அரசியல் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடியலை ஏற்படுத்தித் தராது என்பதை இவர்கள் நன்கு அறிந்திருந்தும் இதையேதான் இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள்
கடந்தகால உலக வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் பின்பற்றி வெற்றி கண்ட இந்த‌ நட்புறவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் இராஜதந்திர வழி முறையை தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக வேண்டுமென்றே ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உணமையாகும்
அன்றொரு காலத்தில் மகாத்மா காந்தியால் வழி நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் ஒரு புறத்தில் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து உயிரிழப்புகளற்ற அகிம்சை வழிப் போராட்டத்தை காங்கிரஸ் தொண்டர்கள் மூலம் வழி நடத்திக் கொண்டு மறுபுறத்தில் தங்கள் போராட்டங்களை பல வழிகளிலும் கொடூரமாக அடக்கிக் கொண்டிருந்த‌ அன்றைய‌ ஆங்கில‌ ஆட்சியாளர்களுடன் வழர்த்துக் கொண்ட ஒரு நெருக்கமான ராஜதந்திர‌ நட்புறவு மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டத்தை ஒரு கௌரவமான முறையில் வெற்றி பெறச் செய்தது
மகாத்மா காந்தியைப் போன்று இப்படியான ஆரோக்கியமான அரசியல் நடத்தி அதன் மூலம் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்பட்டு நாட்டில் அமைதி நிலை ஏற்படுமாயின் தாங்கள் நடத்தும் இந்த‌ சண்டித்தன‌ அரசியல் மாண்டுபோய் தாங்கள் அனைவரும் தமிழர்கள் மத்தியிலிருந்து எங்கோ காணாமல் போய் தங்கள் அரசியல் வியாபாரம் படுத்து விடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில்தான் இப்படியான இனத்துவேசம் கலந்த பிரச்சினைகளை இவர்கள் வழர்த்து வருகிறார்களோ தெரியவில்லை
இங்கே இலங்கைவாழ் தமிழ் அரசியல்வாதிகள் இப்படியாக சண்டித்தன அரசியல் நடத்த அங்கே வெளி நாட்டுப் புலிப் பினாமிகளோ தனக்கொரு நீதியையும் பிறருக்கொரு நீதியையும் வகுத்து வைத்த தங்கள் மேதகு தலைவரின் அடிச்சுவடை பின்பற்றி அநீதிக்கு பேர்போன அந்தத் தலைவரையும் அவர் கும்பலையும் அடியோடு கொன்றொழித்த‌ ராஜபக்க்ஷ சகோதர்களை குற்றவாளிகளாக்கி அவர்களை தூக்கு மேடையில் ஏற்றத் துடிக்கும் அதே சமயத்தில்.. ஆதார பூர்வமாக நீரூப்பிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகளான தங்கள் புலி உறுப்பினர்களை நிரபராதிகளாக்கி தூக்கு மேடையில் இருந்து இறக்கத் துடிக்கிறார்கள் இதுதான் இவர்கள் கூறும் நீதியின் இலக்கணம் அந்த கடந்த கால கசப்பான சம்பவங்களைக் கிளறுவதில் பயனில்லை அப்படி அதைக் கிளறி இந்த நாட்டில் பகைமையையும் குரோதத்தையும் தோற்றுவிப் விப்பதில் எந்த விதமான பலனுமில்லை இன்னும் ஒரு சிலரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக‌ பல‌ இலட்சக் கணக்கான மக்களின் உயிரைப் பலியிட நான் இனி ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.. நாம் இருளில் இருந்து மீண்டும் ஒரு ஒளியில் புது வாழ்வு பெறுவோம்.. ஒரு தாய் மக்களாக நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்“..
புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் புலி உறுப்பினர்களை அவர்கள் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் இடம்பெற்றபோது அதற்கு தலைமை வகித்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கூறிய‌ வார்த்தைகள் இவைகள்ந்த வார்த்தைகள் யதார்த்த ரீதியாக‌ அர்த்த புஸ்டியானவை..
ஆம்.. அன்று நடந்து முடிந்த அந்த கசப்பான யுத்தம் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு யுத்தம் அல்ல.. அது இலங்கைவாழ் தமிழர்.. சிங்களவர்.. முஸ்லீம்கள் என்ற இனப் பாகுபாடுகளின்றி அனைவரும் தனது துப்பாக்கிக்கு தலை வணங்கித்தான் ஆகவேண்டும் என்ற இறுமாப்பு எண்ணம் கொண்ட‌ ஒரு சர்வாதிகாரியையும் அவனது அறிவிலிக் கூட்டத்தினரையும் அழிப்பதற்காக தொடுக்கப்பட்ட‌ யுத்தம்இந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட‌ அந்த‌ யுத்தத்தில் வேண்டுமென்றே பிரபாகரப் புலிப் பாசிசவாதிகளால் பலி கொடுக்கப்பட்டவர்கள்தான் இந்த அப்பாவிப் பொது மக்கள் என்பதை நடந்து முடிந்த இந்த யுத்தத்தின்போது நடைபெற்ற அனைத்து அசம்பாவிதங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்தவர்கள் நிட்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
ஆனால்.. அன்று அந்த யுத்தத்தில் தங்கள் இன்னுயிர்களை இழந்துபோன நமது உறவுகளுக்காக இன்று நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த வெளிநாட்டு புலிப்பினாமிகள் அந்த பொது மக்கள் பெயரில் இன்று செய்கின்ற இந்த‌ ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் மானசீகமாக‌ அந்த‌ உறவுகளுக்காகவா?.. இல்லையே!..
நடந்து முடிந்த அந்த கொடூர யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கே வன்னிப் பிரதேசத்தில்.. குண்டு மழைகளின் மத்தியில்.. கூண்டுக்குள் அகப்பட்ட எலிகளாய்.. பிரபாகரனாதியோரின் இரும்புப் பிடிக்குள் சிக்கிஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போக விடாது தடுக்கப்பட்டு.. பிரபாகரனாதியோரினால் தங்களுக்கு பாதுகாப்பாக மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நமது உறவுகள்.. தங்கள் உயிரையும் தங்கள் குஞ்சு குறுமான்களின் உயிரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக‌ இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தங்களை போக விடும்படி புலிகளின் காலடியில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சி மன்றாடிய‌ போதெல்லாம்.. ஈவிரக்கமற்ற புலிகள் அவர்களை அடித்து நொறுக்கி துன்புறுத்தியதையும்.. அதையும் மீறி தப்பியோட முயற்சித்தவர்களை பின்னாலிருந்து தங்கள் துப்பாக்கிகளால் குருவி வேட்டையாடியதையும்  கைகட்டி.. வாய்பொத்தி மௌனமாக‌ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த‌ இந்த கல் நெஞ்சக் கூட்டமா இன்று அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறது?.. நீதி கேட்டுப் போராடுகிறது?.. இது எத்தனை அழகான நடிப்பு!.. என்னதொரு மாய்மாலத்தனம்!.
இவர்கள் கூறும் அந்தப் பொது மக்கள் என்பவர்கள் யார்?.. அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட‌ இந்த கொலை வெறி பிடித்த‌ பிரபாகரக் கும்பலைத்தானே!..  அன்று தங்கள் கேடுகெட்ட சிந்தனைகளால் தாங்களும் சீரளிந்து த‌மிழ் மக்களின் எதிர்காலத்தையும் சீர்குலைத்து முடிவில் தங்கள் தோல்வி நிட்சயம் என்று முடிவானதும்.. வெள்ளைக் கொடி பிடித்து.. தமிழீழக் கொள்கை துறந்து .. இலங்கை அரசாங்கத்துடன் சமரசம் பேசி.. அவர்கள் அரியாசனத்தில் சரியாசனம் இருக்கலாம் என்றுதானே சரணடையச் சென்றார்கள் அந்த கோழைப் புலிகள்?..
எங்கள் இளைய சமுதாயமொன்றின் இன்னுயிர்களை தங்கள் தமிழீழ வியாபாரத்திற்கு தாரை வார்த்து விட்டு இவர்கள் மட்டும் வெட்கத்தை விட்டு உயிர்ப் பிச்சை கேட்டு இலங்கை இராணுவத்தின் முன் வெள்ளைக் கொடியுடன் மண்டியிட்டு வணங்கிய கோழைத்த‌னத்தையா இந்தப் புலிப் பினாமிகள் வீர காவியம் என்கிறார்கள்?.. .. இலங்கை அரசாங்கம் அந்தக் கொள்ளைக்காரர்களை கொன்றது  குற்றம் என்பதற்காக‌ அவர்களை தண்டிக்கும்படி அன்றொரு காலத்தில் அடிமைகளைவிடக் கேவலமாக நம் அனைவரையும் அடக்கியாண்ட  அந்த‌ வெள்ளைக்காரர்களின் காலடியில் விழுந்து புலம்ப இவர்களுக்கு வெட்கமாக இருக்கவில்லையா?..
அன்று அந்த‌ பிரபாகரக் கோஸ்டியினரை இலங்கை அரசாங்கம் உயிருடன் தப்ப விட்டிருந்தால்
அன்றைய‌ இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி.. அன்றைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா.. என்று ஒரு நாட்டின் மாபெரும் தலைவர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டி.. புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் கைதட்டலை பெற்றுக் கொண்ட‌ இந்த புலிக் கூட்டம் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில்.. பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காத‌ தங்கள் அதி புத்திசாலித் தலைவரின் திட்டமிட்ட‌ வழி காட்டலுடன் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீதும் ஜாலியாக கை வைத்து தங்கள் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியிருப்பார்கள்.. அப்படியொன்று நடைபெற்றிருந்தால்.. படைபலம் கொண்ட‌ அமெரிக்கா.. .. வன்னிப் பிரதேசத்தை மட்டுமல்ல‌ இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களையே பஸ்பமாக்கியிருப்பார்கள்... பகுத்தறிவில்லாமல் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் பிரபாகரன் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்று எப்படி வாதிட‌ முடியாதோ அதேபோல‌ பழி வாங்குவதில் பேர்போன அமெரிக்காகவும் அப்படிச் செய்யாது என்றும் எவரும் மறுத்துக் கூறவும் முடியாது..
அப்படிப்பட்ட ஒரு தலைவனும் அவர் கூட்டத்தின் அழிவுக்காகவும்தான் இந்த வெளிநாட்டு புலிக் கூட்டம் இலங்கை அரசாங்கத்தை பழிவாங்க முனைகிறதே அல்லாமல்.. உண்மையில் முள்ளிவாய்க்காலில் மடிந்து போன நமது உறவுகளுக்காக அல்ல.. அப்படி இவர்கள் நமது உறவுகளில் உண்மையான‌ அக்கறையுள்ளவர்களாக இருந்திருந்தால்.. இதுவரை காலமும் அகதிகள் முகாம்களில் இருந்து அல்லல்பட்டு வெளியேறி இன்று தங்கள் இடங்களில் புதுவாழ்வு ஒன்றை அமைக்க சிரமப்படும் அந்த ஜென்மங்களுக்காக இரங்கியிருப்பார்கள்.. எத்தனையோ வழிகளில் உதவியிருப்பார்கள்..
ஆனால் இவர்களோ இதுவரை காலவும் அந்த பாவப்பட்ட வன்னி உறவுகளுக்காக‌ எந்த உதவியைத்தான் செய்திருக்கிறார்கள்?… புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றித் திரட்டும் கலெக்ஸசனில் அள்ளித்தான் கொடுக்காவிடாலும் கிள்ளித்தானும் தெளிக்காத இந்த சுயநலக் கூட்டம்.. அந்த பரிதாபத்திற்குரிய உறவுகளுக்கு மகிந்தாவின் அராசாங்கம் ஊட்டும் சோற்றில் உப்பில்லை என்றும்.. ஊற்றும் குழம்பில் புளியில்லை என்றும் குறைபிடித்துக் கொண்டு.. உருத்திரகுமாரின் நாடுகடந்த மாயாஜால தமிழீழத்திற்காக காசு சேர்ப்பதிலோ.. அல்லது மாவீரர் தினம்.. அல்லது பொங்கு தமிழ்.. அல்லதுகாலாச்சார நிகழ்சிகள்.. என்று இன்னோரன்ன களியாட்ட நிகழ்ச்சிகள் நடத்தி காசு பார்ப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள்
புலம்பெயர் நாடுகளில் நிலைமை இவ்வாறிருக்க அங்கே இந்தியாவில் இலங்கைத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பழ நெடுமாறனும் வார்த்தைக்கு வார்த்தை இனவெறி கக்கும் இனவெறிக் கவிஞர் காசியானந்தனும் உலகத் தமிழர் பேரமைப்பின் பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டு .. முள்ளிவாய்க்காலில் மாண்டுபோன நமது உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்ஒன்றை அமைக்கும் பணியில் தீவிரமாக‌ இறங்கியிருக்கிறார்கள்.. இதற்கான முதல் கலக்ஸனுக்காக இவர்கள் தெரிந்தெடுத்திருக்கும் இடமோ சுவிஸ்.. ஆம் கதவு தட்டி காசு கறக்கும் கில்லாடிகளுக்கு பேர்போன சுவிஸ் நாட்டில் றஞ்சன் என்பவரை அந்தக் கறக்கும் பணிக்காக காசியானந்தன் அவர்கள் நியமித்திருக்கிறார்....
இங்கே இலங்கையில் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியேறி நாளையப் பொழுதுக்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நமது உறவுகள் அவர்கள் கண்களில் தென்படாமல் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோனவர்கள் மட்டும் அவர்கள் கண்களில் தென்படுவது ஏன்? .. ஆம் எங்கே பிணமுண்டோ அங்கே வந்து கூடும் கழுக்குக் கூட்டமாக வாழும் இவர்கள் கண்களுக்கு மனிதப் பிணங்களைத் தவிர‌ இங்கே வறுமையில் மடிந்து கொண்டிருக்கும் இந்த மனிதக் கூட்டங்கள் தெரிவதில்லைதான்.. இவர்களுக்காக ஏதாவது ஒரு திட்டத்தை வகுத்து அவர்களுக்காக ஒரு நிதியை திரட்டி அனுப்பி வைக்கவும் இவர்கள் தயாராக இல்லைத்தான்.. வேண்டுமானால் அவர்கள் மாண்டு விட்டால் இவர்கள் அவர்களைப் பற்றி பாடி வைப்பார்கள்..
மனித உயிரின் மதிப்பை அறியாத இவர்கள்,. அந்த‌ உயிரின் இழப்பினால் மற்றவர்களுக்கு ஏற்படும் தவிப்பை புரியாத இவர்கள்.. அன்று பாரதி சொன்னதுபோல்.. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை மட்டுமே பேசத் தெரிந்தவர்கள்.. சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் நெஞ்சத்தால் இரங்க மறுப்பவர்கள்.. சிங்களத்தை எதிர்த்துப் போரிட்டு வீரச்சாவை தழுவிக் கொள் என்று மற்றவர்களுக்கு கட்டளையிட்டு விட்டு. . தன்னுயிரை மட்டும் பாதுகாக்க‌ பங்கருக்குள் பதுங்கி தான் மட்டும் வாழப் பழகிக் கொண்ட அந்தத் தலைவனைப் பின்பற்றும் இவர்களுக்கு இவைகள் எல்லாம் எங்கே புரியப்போகிறது….
இப்படியான மனித நேயமற்ற‌ இவர்கள் என்றுமே போர்க் களங்களை கண்டதுமில்லை.. அவற்றின் கொடுமைகளை அறித்ததுமில்லை.. ஆனால் இலங்கையில் மீண்டும் ஒரு போர் உருவாகி அங்கே மீண்டும் மனிதப் பிணங்கள் குகுவிய வேண்டும் என்று மட்டும் ஆசைப் படுகிறார்கள்.. ஏனெனின் இவர்கள் பிணம்தின்னிக் கழுகு மனம் படைத்தவர்கள்..
இன்று இப்படி இனவெறி பேசி இலங்கையில் மீண்டும் ஒரு போருக்கு வித்திடும் கவிஞர் காசியானந்தன்.. வைகோ.. நெடுமாறன்.. போன்றவர்கள் போர் புரியும் வயதெல்லையை தாண்டி விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இளமைத் துடிப்புள்ள அவர்களது பிள்ளைகளையாவது தமிழீழ போருக்கு வன்னி மண்ணுக்கு அனுப்பி போர் புரிய வைத்தார்களா என்றால் விடை இல்லை என்பதுதான்.. அதுதான் போகட்டும் இந்தியாவில் இவர்கள் நடத்தும் இலங்கைத் தமிழர்களுக்கான‌ போராட்டங்களிலாவது பங்குபற்ற அவர்களை அனுமதிக்கிறார்களா என்றால்.. அதுவும் இல்லைத்தான்…. ஆனால் அவர்களை படிப்பு.. பட்டம்.. பதவி.. என்று உயர்வடைய வைத்து பாங்குடன் வாழ வைப்பதில்தான் இவர்கள் அனைவருமே கவனம் செலுத்தி வருகிறார்கள்….. மனித வாழ்க்கையொன்றின் அபிலாஷைக்கள் அடங்கிய இயல்பு வாழ்க்கையொன்றில் அவர்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் இவர்கள்அவர்களை இப்படியான தமிழீழத் தெருக் கூத்துகளில் ஈடுபட அனுமதிப்பதற்கு அவர்கள் ஒன்றும் படிக்காத முட்டாள்கள் அல்ல
ஆம் அங்கே இந்தியாவில் யாரோ பெற்ற பிள்ளைகள் தீக்குளித்து தங்கள் இன்னுயிர்களை இவர்கள் அரசியல் வியாபாரத்திற்காக தியாகம் செய்ய வைத்து.. அதேபோல‌ இங்கே இலங்கைத் தீவில் யாரோ பெற்ற பிள்ளைகள் இவர்கள் பிழைப்புக்காக மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து துப்பாக்கி ஏந்தி போர்க் களங்களில் செத்துமடிய வைத்து.. அதன் பலனாக தங்கள் குடும்பத்துடன் சீரொடு பொலிந்து சிறப்புற வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்….
இந்த முள்ளிவாய்க்கால் நிதிக்காக காசியானந்தம் அவர்கள் பேசியிருக்கும் அந்த வீடியோ ஒலிப்பதிவில்.. சிங்களத்தை வென்ற.. வரலாற்றுப் புகழ் மிக்க‌ ராஜராஜ சோழனின் தலை நகரான தஞ்சாவூரில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்படப் போவதாக கூறி இனவெறி தலைக்கேறிய‌ வெளிநாட்டு புலிப் பினாமிகளையும் புலி ஆதரவாளர்களையும் புளங்காகிதமடைய வைத்திருக்கிறார் அவர்..
(கவிஞர் காசியானந்தன் அவர்கள் அப்படிப் பேசியிருக்கும் வீடியோ ஒலிப்பதிவின் லிங்க் இது)…
உலகில் பாதுகாக்கப் படவேண்டிய புராதானச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கற்கோயிலைக் கட்டிய பெருமைக்குரிய ராஜராஜ சோழன் என்ற இந்த சோழ மன்னன்.. காசியானந்தன் அவர்கள் கூறியிருப்பதைப் போல் சிங்களத்திற்கு எதிராக மட்டுமா போர் புரிந்தான்?.. இல்லையே!.. அதற்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட சேர.. பாண்டிய மன்னர்களையல்லவா ஆட்டிப் படைத்தான்!.. தன் நாடு பிடிக்கும் ஆசையால் அந்த மன்னர்களுடன் விதண்டாவாதப் போர் தொடுத்து தன் ஆணவத்தையல்லவா காட்டியிருந்தான்!… அந்த மன்னர்கள் எல்லாம் என்ன‌ சிங்களவர்களா?
அன்றைய காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களின் சிறப்பான ஆட்சியின் திலகமாக விளங்கிய மதுரையை ராஜராஜ சோழனின் படைகள் முற்றுகையிட்டு கைப்பற்றியபோது அங்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்லவா!…. அந்த அழகிய‌ நகரத்தை சூறையாடி அங்கே வாழ்ந்த குடிமக்களை கொன்றொழித்து.. அந்த நகரத்தை இடித்து தரைமட்டமாக்கி.. சுட்டெரித்து நாசம் செய்த கொடுமையை அறிந்திராத‌ புலம் பெயர் புலித் தமிழர்களுக்கு கவிஞர் காசியானந்தம் காதில் பூச்சுற்றும் இந்த சிங்களத்தை வென்ற ராஜராஜ சோழன்என்ற கதை இனிப்பாகத்தான் இருக்கும்..
ஆனால்.. கல் வெட்டுகளிலும்.. செப்பேடுகளிலும்.. செய்யுள்களாக‌ ஓலைச் சுவடிகளிலும்.. நீண்டு விரிந்திருக்கும் அந்த ராஜராஜ சோழனின் உண்மைக் கதை வித்தியாசமானது.. சுவைமிக்கது.. இலங்கைத் தீவை அவன் ஏன் எதற்காக ஆக்கிரமித்தான் என்ற‌ உண்மைக் காரணத்தை அறிந்திராத பெரும்பாலான‌ நமது இலங்கைத் தமிழர்கள்.. அவன் சிங்களத்தை வென்றான் என்ற காசியானந்தனின் கூற்றை நம்பத்தான் செய்வார்கள்.. அதனால் அவர்களுக்காக‌ உண்மையில் என்ன நடந்தது என்பதை அந்த சரித்திர காலத்து வரலாற்று ஆதாரங்களுடன் என் அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்
அன்றும் அப்படித்தான்.. அந்த‌ மாலை மயங்கிச் சரியும் வேளைகளில் .. செவ்வானத்தின் பின்னணியில் செங்குருதி கொட்டிக் கிடக்கும் அந்த போர்க்களங்களில்.. போர்வீரர்கள் என்ற பெயரில் யாரோ பெற்ற அந்த பிள்ளைகளின் செத்து மடிந்துபோன உடல்களை உண்டு சுவைப்பதற்காக எங்கோ மரக் கிளைகளில் காத்திருந்தன கழுகுக் கூட்டங்கள்…… (தொடரும்)
அன்புடன்
சித்திறெஜினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக