புதன், 12 அக்டோபர், 2011

கார்த்தி நடிக்கும் சகுனியில் 'நீரா ராடியா பாத்திரம்'!


திருமணத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் சகுனி. வழக்கம்போல காமெடி அல்லது ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், இதில் அரசியல் விவகாரங்களையும் சேர்த்துள்ளார்களாம்.
2 ஜி வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட நீரா ராடியாவின் கதை இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. திரைக்கதையே நீரா ராடியாவை மையப்படுத்தித்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நீரா ராடியாவின் கதையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீரா ராடியா சம்பந்தமான பகுதியை மட்டும் இப்படத்தில் சேர்த்துள்ளனராம்.கிட்டத்தட்ட படத்தின் வில்லியாக நீரா ராடியா பாத்திரம் வருகிறதாம். கேரக்டருக்கும் நாயகன் கார்த்திக்கும் இடையிலான மோதல், அரசியல் தொடர்புகள் ஆட்சி மாற்றம் போன்றவற்றை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார்களாம். சங்கர் தயாள் இப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக்கின் ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார்.

கார்த்தி நடிக்கும் முதல் சீரியஸ் - அரசியல் படம் சகுனி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக