ஞாயிறு, 23 அக்டோபர், 2011

இலங்கையின் புதிய வீசா நடைமுறைகள் குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது!

இலங்கையின் புதிய வீசா நடைமுறைகள் குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வீசாக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர்கள் அறவீடு செய்யப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமென இந்தியா கோரியுள்ளது.
பிரித்தானியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவே இலங்கையுடன் அதிகளவு பயண உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும், இலங்கை குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேராவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தெற்காசிய வலய நாடு என்ற ரீதியில் வீசா கட்டணத்தை இலங்கை குறைக்க வேண்டுமென இந்தியா கோரியுள்ளது.
இதேவேளை, 50 அமெரிக்க டொலர் அறவீடு செய்யும் திட்டமானது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானம் எனவும் இதில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகள், பிராந்திய வலய நாடுகளுக்கு கட்டண சலுகை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக