செவ்வாய், 25 அக்டோபர், 2011

கூட்டமைப்புக்குத் தெரிந்துள்ள போதிலும் எதிர்ப்பு பிர(விப)சாரம் செய்கிறார்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும்-பஷில் ராஜபக்ஷ!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதிய இந்த வேலைத்த்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். காணிப் பதிவை முன்னெடுப்பதன் அவசியம் கூட்டமைப்புக்குத் தெரிந்துள்ள போதிலும், அவர்கள் அதனை எதிர்க்கின்றனர் என்று பொரு ளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பு விபசாரம் செய்கிறார்கள்.இலங்கையில் எவரும் எங்கும்வாழலாம் என்பதே எமது கொள்கையாகும்.இருப்பினும், அரசாங்கம் புதிதாக எந்த வொரு சிங்களக் குடும்பத்தையும் வடபகுதியில் மீள்குடியமர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டு அங்கு காணிப்பதிவுகளை முன்னெடுத்து வருகின்றோம். காணி விவகாரங்கள் தொடர்பில் அப்பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பது அவசியமானதாகும்.
கடந்த கால யுத்தம் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி உரிமையாளர்களிடம் அவற்றுக்கான எந்தவொரு ஆவணம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அதிகமானோர் அவற்றை இழந்துவிட்டனர். மேலும், பல குடும்பங்கள் அரச காணிகளில் குடியிருந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துக்குச் சொந்தமான அதிக காணிகள் உள்ளன. எனவே, இவற்றை அடையாளம் காணவேண்டியுள்ளது. அரச காணிகளில் குடியிருந்தவர்களுக்கும் அவற்றை முறையாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், காணி தொடர்பான எந்தவொரு ஆவணம் இல்லாதவர்களுக்கும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நாங்கள் இந்தக் காணிப் பதிவுத் திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
பிரதேச மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னரே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இது அவசியமானதாகும். இதன் மூலம் மக்களுக்கு நன்மையே கிடைக்கின்றது. மேலும், இந்தியா எமக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளது.
இவற்றில் அதிகமான வீடுகள் மக்களின் காணிகளிலேயே கட்டிக்கொடுக்கப்படும். அந்த வீடுகளைப் பெறும் குடும்பங்கள் தங்கள் காணிகளை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான நிலையில் ஆவணம் எதுவும் இல்லாதவர்கள் எவ்வாறு வீடுகளைப் பெறமுடியும் எனவும் பசில் ராஜபக்ஷ இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக