செவ்வாய், 18 அக்டோபர், 2011

துமிந்த சில்வாவை சந்தேக நபராகக் கருத முடியாது-தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலைச் சம்பவதின் சந்தேக நபராகக் கருத முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து கிசிச்சை பெற்ற வரும் துமிந்த சில்வா, பாரத படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கிடையாது என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா ஓர் நோயாளி எனவும் அவர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது எனவும் லக்ஷ்மன் ஹூலுகல்ல குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வீசா பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாரத படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாரதவை துமிந்த சில்வாவே முதலில் சுட்டதாக பாரதவின் சாரதி சமன் சமந்த புலனாய்வுப் பிரிவிற்கு அளித்த சாட்சியில் தெரிவித்துள்ளார்.
பாரதவின் படுகொலைச் சம்பவத்திற்கு ஆளும் கட்சியே பொறுப்பேற்க வேண்டுமென பாரதவின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.தாக்குதல் சம்பவம் n;தாடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது என பாரதவின் சகோதரி ஸ்வர்னா குணரட்ன தெரிவித்துள்ளார்.

சகோதரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பி வைத்த கடிதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதில் எதனையும் அனுப்பி வைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ளஇதனை ஓர் திட்டமிட்ட படுகொலைச் சம்பவமாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக