ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மாறன் சகோதரர்கள் வீடுகளில் நடந்த ரெய்டில் என்ன சிக்கியதாம்?’’

‘‘என்ன சிக்கியது என்பதை விட சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய நடந்திருக்கிறது. தயாநிதி மாறன் வீட்டுக் கதவை சி.பி.ஐ. போலீஸார் தட்டியதும், அவர்கள் கதவைத் திறக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு மேலாக சி.பி.ஐ. போலீஸார் உள்ளே போக போராட வேண்டியதாகிவிட்டது. இந்தத் தகவல் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தெரியவந்ததும், கூடு தலாக சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தயாநிதி மாறன் வீட்டுக்குள் போனதும், வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையையும் ‘இன்ச் பை இன்ச்’சாக சோதனை நடத்தியிருக்கிறார்கள். வீட்டில் எத்தனை செருப்பு இருக்கிறது. என்ன ‘பிராண்ட்’ என்பது முதல் என்ன மாதிரியான ஃபுளோரிங், உள் அலங்காரப் பொருட்கள், சோபா, நாற்காலி, டி.வி. உள்பட அனைத்தையும் கணக்கெடுத்திருக்கிறார்கள். அதோடு விடவில்லை. எலெக்ட்ரிக்கல் பொருட்கள், சுவிட்ச் வரையில் கணக்கெடு த்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பில் இருக்கிறதா? எங்கே வாங்கினீர்கள்? எப்போது வாங்கினீர்கள்? என்று துளைத்து எடுத்து விட்டார்களாம்.’’ ‘‘வழக்கமாக சி.பி.ஐ. ரெய்டில் இதெல்லாம் நடக்குமா?’’
‘‘ரெய்டுக்கு வந்த அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்ததால் கோபமான அதிகாரிகள் இப்படி செயல்பட்டதாகச் சொல் கிறார்கள். அதுமட்டுமல்ல... தயாநிதி வீட்டில் இருந்து ஒவ்வொரு ஃபைலையும் தோண்டித் துருவி எடுத்துள்ளார்கள். அப்போது அங்கே இருந்த காவேரி கலாநிதி, ‘இதை ஏன் எடுக்குறீங்க...? இதுக்கும் கேஸுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேள்வி கேட்க, அதிகாரிகள் உச்சகட்ட வெறுப்பாகி கையில் கிடைத்த ஃபைல்களையெல்லாம் மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே வரும் வரையில் தயாநிதி வீட்டில் இருந்தவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளை வெறுப்பேற்றும் வகையில் நடந்திருக்கிறார்கள். இதனால்தான் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளையும் வரவழைத்து விசாரணையை நடத்தினார்களாம். வீடு முழுவதையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்திருக்கிறார்கள். மொட்டை மாடியில் உள்ள டவர், வாட்டர் டேங்க் என எதையும் விட்டு வைக்காமல் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.’’

‘‘அதிகாரிகள் கோபமாக இருக்கிறார்கள் என்றால் சன் டைரக்ட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கும் காவேரி மீதும் வழக்கு வருமா?’’ சந்தேகத்தைக் கிளப்பினார் சிஷ்யை.

‘‘இது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினேன். ‘நாங்கள் அவர்களைப் போல நடந்துகொள்ள மாட்டோம். கலைஞர் டி.வி. விவகாரத்தில் அதிகப் பங்குகளை தயாளு அம்மாள் வைத்திருந்தாலும், தினசரி அலுவல்களில் அவர் கலந்து கொள்வது இ ல்லை. அதேபோல, காவேரி கலாநிதிக்குப் பங்குகள் அதிகம் இருந்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பது எல்லாம் கலாநிதி மாறன்தான். அப்படி இருக்கையில் ஏன் காவேரி கலாநிதியை வழக்கில் சேர்க்க வேண்டும்?’ என்று கேட்கிறார்கள்.’’

‘‘நியாயமான அதிகாரிகள்தான்... ஆனால் இந்த ரெய்டு எல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே...’’

‘‘சி.பி.ஐ. அதிகாரிகளும் ‘இது வழக்கமான ரெய்டுதான். வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கிறது. இது போன்ற சோதனைகளில் இன்னும் சில விவரங்கள் கிடைக்கக் கூடும் என்பதால் சோதனை நட த்தினோம்’ என்கிறார்கள். இதுதவிர, சகோதரர்களின் வெளிநாட்டு அலுவலகங்களை சோதனை நடத்தினால், இன்னும் நிறையத் தகவல்கள், ஆவணங்கள் கிடைக்கலாம் என்று சி.பி.ஐ. நினைக்கிறது.’’

‘‘இவர்கள் மீது எப்போது நடவடிக்கை இருக்குமாம்...?’’

‘‘வரும் 15-ம் தேதி அல்லது 17-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கலாகும் என்கிறார்கள். அதையடுத்து சகோதரர்கள் இருவரும் கைதாகலாம் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் சொல்கிறது.’’

‘‘திகாரில்தான் தீபாவளியா? மாறன் சகோதரர்கள் வீடுகளில் நடந்த ரெய்டு பற்றி கருணாநிதி என்ன நினைக்கிறாராம்?’’

‘‘மாறன் சகோதரர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நேரத்தில் அவர் திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்று இருந்தார். ரெய்டு தகவல் வந்ததும் திருச்சி பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் கருத்துக் கேட்கச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ‘ஓய்வில் இருக்கிறார்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் அங்கிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், கருணாநிதியுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியி ருக்கிறார். மதிய உணவு வேளையிலும் கருணாநிதி பதில் ஏதும் சொல்லவில்லை. பொதுக்கூட்டத்திலாவது பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாந்து போனார்கள். கடந்த காலங்களில் மாறன் சகோதரர்கள் தொடர்பான செய்திகள் வ ரும்போது, ‘அவர்களே பார்த்துக் கொள்வார்கள்’ என்று கருணாநிதி சொல்லியிருந்தார். இந்த அடிப்படையிலேயே மறுநாள் ப த்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இதையடுத்து சகோதரர்கள் தரப்பில், ‘கட்சி எங்களை கைவிட்டுவிட்டது என்று இமேஜ் வந்துவிட்டது. உயர் மட்ட செயல்திட்டக் குழுவைக் கூட்டி தீர்மானம் போட வேண்டும்’ என்று கெஞ்சியி ருக்கிறார்கள். அதற்கு மறுத்து ஒப்புக்கு அறிக்கை வெளியிட்டார், கருணாநிதி. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட சி.பி.ஐ. நடவடிக்கையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை...’’

thanks kumudam+mani NZ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக