வியாழன், 27 அக்டோபர், 2011

கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்

அங்கும் கொம்பு சீவி சீவி உசுப்பேத்தி விடுபவர்கள் உண்டு 
லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக கடைசி நிமிடம் வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடைசி கட்ட யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது கடாபியின் மகன் முதஸ்ஸிம் என்று அந்த பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார்.
சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தின் போது முஅம் மர் கடாபியுடன் இருந்த அவரது காவலர் மன்சூர் தாவ் என்பவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர் கடைசி கட்ட மோதலின் போது கிளர்ச்சியாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசி கட்ட மோதல் குறித்து அரபு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப் பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக் கப்பட்ட பின்னரும் லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர்.

லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும் தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத் ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால் சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ் வருத்தத்துடன்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு எதி ரான மோதலில் முதஸ்ஸிம் கடாபியே முன்னின்று நடத்தினார். அவர்தான் படைகளுக்கு கட்டளை வழங்கியதோடு, படை நகர்வுகள் குறித்தும் அவர்தான் தீர்மானித்தார். கடாபி இதில் ஈடுபடவில்லை என்றார்.

முஅம்மர் கடாபியின் நான்காவது மகனான 36 வயது முதஸ்ஸிம் கடாபி இறுதிக்கட்ட மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கடைசி கட்ட மோதலின் போது முஅம்மர் கடாபி சிர்த்தை விட்டு வாகன தொடரணி மூலம் தப்பியோட முயன்றதாகவும் அதற்கு தாக்குதல் நடத் தப்பட்டதாகவும் நேட்டோ கூட்டுப்படை கூறிய தகவலை மன்சூர் தாவ் மறுத்துள்ளார்.

குறித்த வாகனத்தொடரணியில் தாமும் இருந்ததாக கூறியுள்ள அவர் அந்த தொடரணி மீது நேட்டோ எந்த தாக் குதலையும் தொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களின் கடுமை யான தாக்குதலாலேயே பயணம் தடைப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடாபி கடைசி நேரத்தில் சிர்த் நகரை விட்டு தப்ப முயலவில்லை என்றும் அவர் தனது பிறந்த இடமான ஐரில் வலி பகுதியை நோக்கி செல்ல முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவர் மேலும் கூறும்போது;“நாம் இறுதிக்கட்ட மோதல் நடந்த பகுதியை விட்டு தப்பிச் செல்ல முயன் றோம். எனினும் கிளர்ச்சியாளர்கள் எம்மை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இதனால் அவர்களுடன் கடுமையாக மோத வேண்டி ஏற்பட்டது.

கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. நான் கடுமையாக தாக்கப்பட்டு சுய நினைவு இழந்து கிடந்தேன் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக