புதன், 5 அக்டோபர், 2011

விஜயகாந்த் மைக்கை பிடிங்கிய போலிஸ் போட்டுத்தாளித்த விஜயகாந்த்




சங்கரன்கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 04.10.2011 இரவு தேர்தல் பிரச்சாரம்
செய்தார். 
பிரச்சாரம் செய்வதற்கு மதியம் அனுமதி பெற்றிருந்த நிலையில் இரவுதான் விஜயகாந்தால் வரமுடிந்தது.   இதனால் கூட்டம் அதிக அளவில் கூடிவிட்டது.


அந்த நேரம் போலீசார் வந்து,  மைக் செட்டுகள், விஜயகாந்த் பேசவிருந்த மை அனைத்து பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
பின்னர் பேசவந்த விஜயகாந்துக்கு வேறு ஒரு மை கொடுக்கப்பட்டது.  மைக்கை பிடித்ததுமே போலீசை போட்டுத்தாளித்தார் விஜயகாந்த்.
ஆவேசமாக மைக்கை பிடித்த விஜயகாந்த்,  ‘’சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா?  நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர்.  எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க  தரணும்.
இது உங்களுக்கு தெரியாதா? இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க. குறிப்பிட்ட நேரம் தவறி வந்தாலும், தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும் என்கிற அவசியம் இல்ல.
நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா? மக்களைக்காக்க வேண்டியதுதான் போலீசின் வேலை. அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச்சொல்லியாரேனும் சொன்னாங்களா?
முன்னால் நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம். இப்ப 27 எம்.எல்.ஏவாக இருக்குறோம்.நாளைக்கு நாங்கதான்.  இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க. உங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல.  தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்கிட்ட நான் பேசிக்குறேன்.   உங்க நண்பன்னு  காவல்நிலையத்தில்  போர்டு போட்டிருக்கீங்களே.முதல்ல அத தூக்கி தூர வீசுங்க’’ என்று ஆத்திரத்தை கொட்டிவிட்டு ராஜபாளயம் கிளம்பி சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக