ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தொம்பே சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது!

தொம்பே பிரதேசத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.
காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களினால் கைதியொருவர் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனால் பிரதேச மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதிக் காவல்துறை பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் குறித்த காவல்துறை உத்தியோகத்தகர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொம்பே காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக