புதன், 12 அக்டோபர், 2011

90 சவுக்கடி தரவும் உத்தரவு நடிகைக்கு 1 ஆண்டு சிறை!

மெல்பர்ன்:தடையை மீறி ஆஸ்திரேலிய திரைப்படத்தில் நடித்த ஈரான் நடிகைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. 90 சவுக்கடி தரவும் உத்தரவிட்டது. ஈரானை சேர்ந்த பிரபல நடிகை மர்சே வாபமர். அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க நடிகைகளுக்கு அரசின் கட்டுப்பாடு உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சியான் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் ‘மை டெகரான் ஃபார் சேல்’ என்ற படத்தில் மர்சே நடித்தார்.

அந்த பட நிறுவனத்தின் படங்களுக்கு ஈரானில் தடை உள்ள நிலையில், மர்சே நடித்த அந்த திரைப்படம் 2010ம் ஆண்டில் பல சர்வதேச விருதுகளை பெற்றது. எனினும், கட்டுப்பாட்டை மீறியதாக நடிகை மர்சே மீது ஈரான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று அளித்த தீர்ப்பில், நடிகைக்கு ஓராண்டு சிறையும், 90 சவுக்கடியும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக