செவ்வாய், 11 அக்டோபர், 2011

வைத்தியர்கள் பற்றாக்குறை 47 வைத்தியசாலைகளுக்கு மூடு விழா

ஆயிரக்கணக்கான இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் இலங்கை வைத்தியர்கள் வெளிநாட்டிலேயே தொழில் புரிவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியர்கள் 3500 பேர் தொழில் புரிவதோடு பிரித்தானியாவில் 2500 பேரும் அமெரிக்காவில் 1500 பேரும் தொழில் புரிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் தற்போது பணிபுரியும் வைத்தியர்களின் தொகை போதுமானதாக இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
வைத்தியர்கள் இல்லாததால் நாட்டில் இதுவரையில் 47 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
அதனால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்பி தமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இக்கருத்துக்களை வெளியிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக