திங்கள், 3 அக்டோபர், 2011

இஸ்லாமிய தலைவர் அகா கான் விவாகரத்து ரூ.416 கோடி

காஸ்ட்லி டைவர்ஸ்.. ரூ.416 கோடி!. இஸ்லாமிய மதபிரிவு தலைவர் அகா கான் விவாகரத்து  

ஈரானை சேர்ந்த பாரம்பரிய இமாம் குடும்பத்தினருக்கு ‘அகா கான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டத்தில் இருப்பவர் ஷா கரீம் அல் உசேனி (74). 49-வது அகா கான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். பல தொழில்கள் செய்து வருபவர். ரூ.46 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். எல்லா கண்டங்களிலும் பங்களா வைத்திருக்கிறார். 600 ரேஸ்கோர்ஸ் மைதானங்கள் வைத்துள்ளார். பிரபல மாடல் அழகி சாரா சலியை 1969-ல் திருமணம் செய்தார்.25 ஆண்டுகளில் 3 பிள்ளைகள் பிறந்தன. 1995-ல் அவரை டைவர்ஸ் செய்துவிட்டு ஜெர்மனியை சேர்ந்த பாப் பாடகி பேகம் இனாராவை (52) 1998-ல் பிரான்சில் உள்ள தனது எய்ஜில்மன்ட் எஸ்டேட்டில் 2-வது திருமணம் செய்தார். டைவர்ஸ் பெறப்போவதாக இருவரும் 2004-ல் அறிவித்தனர்.

பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இனாராவுக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இனாரா அப்பீல் செய்தார். மேல் கோர்ட் விசாரித்து ரூ.416 கோடி கொடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. இது பிரான்சின் ‘காஸ்ட்லி விவாகரத்து’ என கூறப்படுகிறது.

1 கருத்து:

  1. இவன் சுத்த பிராடு இவனது மூதாதையர் ஷியா பிரிவுக்குள் தனக்கென இஸ்மாயிலி என்ற தனியமைப்பு துவங்கி பரம்பரை பரம்பரையாக மததலைவராக பிரகடனம் செய்து வருகின்றனர் இவனது பக்தர்கள் உலகெங்கும் உள்ளனர் உலகெங்கும் குறிப்பாக பாக்கிஸ்தானிலும்,இந்தியாவிலும் அனைத்து மாநிலத்திலும் அகாகான் அறக்கட்டளை நிறுவி மருத்துவமனைகள் கல்விகூடங்களை ந்டத்தி வருகிறான் மோசடிகள் வாயிலாகவும் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து அந்த பணத்தில் சிறுபகுதியை மக்கள் நலனுக்கு சிலவு செய்து வருகிறான் இவன் ஈரான் நாட்டுகாரன் அல்ல பாக்கிஸ்தானை சார்தவன் இவனது மூதாதையர்கள் லபனான் சிரியா எல்லைபகுதியை சார்ந்தவர்கள் இவனது தந்தை அகா கான் இஸ்மாயிலி பிரிவு கலிபாவக இருந்தபோது இந்து மகாசபையுடன் இணைந்து இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்காக குரல் கொடுத்தவர்(அப்போது ஜின்னா பிரிவினைக்கு எதிராக செயல்பட்டு வந்தார்) மற்ற படி சாய்பாபா, பாபா ராம்தேவ், அமிர்தானந்தா மாயி போன்று இவன் பெரும் பிராடு

    பதிலளிநீக்கு