வியாழன், 13 அக்டோபர், 2011

2வது கணவரிடம் இருந்தும் விவாகரத்து கேட்கிறார் நடிகை வனிதா


சென்னை : நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளான். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தம்பதியினர் இருவரும் பிரிந்தனர். மகன் ஸ்ரீஹரி, ஆகாஷுடன் இருந்தான். அவனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்தார். ஆகாஷும் வனிதா மீது புகார்களை கூறிவந்தார்.

இதற்கிடையே விவகாரத்து கோரி தொடர்ந்த வழக்கில் வனிதா, ஆகாஷ் இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது. இதையடுத்து, ஆனந்த் (எ) ஆனந்த்ராஜன் என்பவரை காதலித்த வனிதா, 2007 டிசம்பர் 12ம் தேதி அவரை செகந்தராபாத்தில் திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், ஸ்ரீஹ ரியை தன்னுடன் அழைத்து வர வனிதா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மகன் தொடர்பான விவகாரம் தொடர்ந்து வந்த நிலையில், மகனுக்காக ஆகாஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக, பத்திரிகைகளுக்கு வனிதா பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, 2வது கணவர் ஆனந்த்ராஜனிடமிருந்து விவகாரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதா நேற்று மனு தாக்கல் செய்தார். ஆனந்த்ராஜனும் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு பின்னர் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தினர் மற்றும் எங்கள் மீது அக்கறை கொண்டவர்களும், எங்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, கடந்த 2010 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

இதையடுத்து, இருவரும் மனமுவந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். இந்த பிரிவு யாருடைய தூண்டுதலின் பேரிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ நடைபெறவில்லை. விவாகரத்து முடியும் வரை குழந்தையை கணவர் பார்க்கலாம். விவாகரத்துக்கு பிறகு குழந்தை மீது அவருக்கு எந்த உரிமையும் இருக்காது. எங்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து இருவரும் பத்திரிகைகள் உள்ளிட்ட யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே, எங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்வதற்காக வனிதா மற்றும் ராஜன் ஆனந்த்ராஜன் ஆகிய இருவரும் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் ஆஜரானார்கள். வனிதா சார்பில் வக்கீல் என்.விஜயராஜ் ஆஜராகி, “இருவரும் மனமுவந்து விவகாரத்து கேட்டுள்ளனர்ÕÕ என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இந்த மனு 2012 ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக