செவ்வாய், 4 அக்டோபர், 2011

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணியில் 900 பேர்!

இருபத்து மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு தினங்கள்:கண்காணிப்பு பணியில் 900 பேர்!

இருபத்து மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊர்வலம் நடத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தல், வேட்பாளர்கள் வீடு வீடாகச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும்.அத்துடன் கையடக்கத் தொலைபேசியினூடாக குறுந்தகவல்கள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதனையும் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் சட்ட விதிகளை மீறி நாளை நள்ளிரவுக்குப் பின்னரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளிலும் 17 மாநகர சபையிலும் 05 பிரதேச சபையிலும் ஒரு நகர சபையிலும் எதிர்வரும் 08 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
15 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்க பதி வாகியுள்ளனர்.
இந்நிலையில் 23 உள்ளூராட்சி சபை களிலும் தேர்தல் நிலைமைகளை கண் காணிக்கவென 900 கண்காணிப்பாளர்களை சேவையிலீடுபடுத்தியிருப்பதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார். அத்துடன் பெப்ரல் அமைப்பினால் 30 இற்கு மேற்பட்ட வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக