ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கடாபியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்!

: சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபிக்கு உலகம் முழுவதிலும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி கணக்கு, ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்டவைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் அதிகளவிலான பணம், தங்கம், முதலீடுகள் ஆகியவற்றை கடாபி பதுக்கி வைத்திருந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் கடாபியின் சொத்துக்கள் மட்டுமின்றி லிபியாவில் உள்ள முதலீடுகளை கைப்பற்றவும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கடாபிக்கு 37 பில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 30 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக கடாபியின் சொத்துக்களை அந்நாட்டு அரசுகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக