செவ்வாய், 11 அக்டோபர், 2011

2 இந்தியர்கள் கோரக் கொலை: ஐக்கிய அரபு எமிரேட்டில் 2 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை

துபாய்: 2 இந்தியர்களை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து, துபாய் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்த 2 இந்தியர்கள் காணாமல் போயினர். போலீசாரின் விசாரணையில் அவர்களை 12 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் சேர்ந்து கடத்தி சென்றது தெரிந்தது.
சட்ட விரோதமான வர்த்தகத்தில் ஏற்பட்ட மோதலில் பழிவாங்க கடத்தப்பட்ட அந்த 2 பேரையும், 13 பேர் கொண்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் கும்பலை சேர்ந்த 5 பேர் 2 பேரையும் நிர்வணப்படுத்தி பாலியல் சித்திரவதையையும் செய்தனர். அதிலும் கோபம் அடங்காத அந்த கொடூர கும்பல் இறுதியில் அந்த 2 பேரையும் ஒரு குழியில் போட்டு தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில், 2 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 2 பேருக்கு 15 ஆண்டு சிறைவாசமும், மீதமுள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருந்ததாக, வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக