ஞாயிறு, 16 அக்டோபர், 2011

லதா ரஜினிகாந்துக்கு, 16.50 கோடி ரூபாய் அட் வான்ஸ் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது

அக்டோபர் மாதம் 11-ம் தேதியும் சென்னையில் திரையுலகினர் காக்டெயில் பார்ட்டி வைத்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சக்சேனா கைது செய்யப்பட்டதும் சென்னையில் திரையுலகம் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது. இந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதியும் சென்னையில் திரையுலகினர் காக்டெயில் பார்ட்டி வைத்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
மும்பையின் தாதா ஃபைனான்ஸியர் சுசில் குப்தாவை போலீஸார் கைது செய்ததுதான் கொண்டாட்டத்திற்குக் காரணம். கை துக்குக் காரணமாக இருந்தவர் லதா ரஜினிகாந்த் என்பது இந்தச் செய்தியில் கூடுதல் சுவாரஸ்யம். அதுவும் கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அவலத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நியாயம் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்துக்கே இந்த நிலையா என கோடம்பாக்கம் அலறிய சம்பவம் அது. சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கும் ராகவேந்திரா அவென்யூவில் லதா ரஜினிகாந்தின் அலுவலகம் இயங்கி வருகிற து. ரஜினியின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த அலுவலகத்தில், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி அறக்கட் டளை செயல்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இந்த அலுவலகத்துக்கு வந்த ஒரு கும்பல், அலுவலகம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நான்கு கார் மற்றும் ஆறு ஆட்டோக்களில் வந்த இருபது பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடந்தபோது, லதாவின் மேலாளர் சஞ்சய் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். “எங்கடா அவ?’’ என்று சுசில் மிரட்ட, “அம்மா வீட்டில இருக்காங்க’’ என்று சொன்னார் சஞ்சய். ரஜினி வீட்டுக்குச் சென்ற சுசில் குப்தா, “பணத்தைக் கேட் டா என்கிட்டே டபாய்க்கிறீங்களா? உன் ஆபீஸையே அடிச்சு நொறுக்கிட்டேன்! மரியாதையா எனக்குச் சேர வேண்டிய இரண்டரைக் கோடி ரூபாயை வட்டியோட கொடுக்கலேனா நான் சும்மா இருக்க மாட்டேன்’’ என்று எகிறிவிட்டுச் சென்றி ருக்கிறார்.



இந்தச் சம்பவம் உடனடியாக நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவர் இதுகுறித்து எந்த புகாரையும் தர வேண் டாம் என்று லதாவிடம் சொல்லி விடுகிறார். இதுகுறித்து உளவுத்துறை, அப்போதயை முதல்வர் கருணாநிதிக்குத் தகவல் கொடுக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராசா மீதான தாக்குதல் அதிகரித்த நிலையில், கருணாநிதி அப்போது ஏலகிரியில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். இதனால் லதா ரஜினிகாந்த் அலுவலகம் மீதான தாக்குதலை அவர் க ண்டுகொள்ளவில்லை.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி, ரஜினி தீவிரமாக விசாரித்தார். தாக்குதல் நடத்துவதற்கு சசில் கு ப்தாவுக்கு ஆதரவாக இருந்தது சக்சேனா, ஐயப்பன் ஆகிய இருவர் என்கிற அதிர்ச்சியான தகவல் ரஜினிக்குக் கிடைத்தது. சுசில் குப்தாவும், சக்சேனாவும் நெருங்கிய நண்பர்கள். சுசில் குப்தாவுக்காக, ஐயப்பனையும் அடியாட்களையும் அனுப்பி வைத் தது சக்சேனா என்பதும், தாக்குதல் நடந்த இடத்தில் காரில் ஐயப்பன் அமர்ந்து கொண்டு கட்டளைகள் பிறப்பித்துக் கொண் டிருந்தார் என்கிற செய்தி அறிந்து நொந்து போனாராம் ரஜினிகாந்த். ஆனாலும், இதுகுறித்து புகார் எதுவும் தர வேண்டாம் எனவும், பத்திரிகைகளில் செய்தி வர வேண்டாம் என்றும் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார்.

சுசில்குப்தா மிரட்டியதன் பின்னணி இதுதான்: தனது மகள் சௌந்தர்யா எடுத்த ‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக, லதா ரஜினிகாந்த் 4.5 கோடி ரூபாய் பணத்தை சுசில் குப்தாவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தில், இரண்டு கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியிருந்தார். மீதிக் கடனை இரண்டு வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பணத்தை வட்டியுடன் வசூலிக்கவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாம்.

தாக்குதலுக்கு மறுநாள், சுசில் குப்தாவை லதா ரஜினிகாந்த் சார்பில் அழைத்துப் பேசினார்கள். ‘‘பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் 18 ஏக்கர் நிலத்தை லதா விற்க இருக்கிறார். அந்த நிலத்தை விற்றதுமே, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடுவார்’’ என்று சுசிலிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த நிலத்தை மும்பையில் இருக்கும் ஜே.டி.ஏ. நிறுவனம் வாங்க லதா ரஜினிகாந்துக்கு, 16.50 கோடி ரூபாய் அட் வான்ஸ் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், அந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்திருந்ததால், உடனே லதாவால் விற்க முடியவில்லை. ஜே.டி.ஏ. நிறுவனமும், “நீங்கள் நிலத்தை விற்க முடியவில்லை என்றால், கொடுத்த அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டது.
அந்த 18 ஏக்கர் நிலத்தை ஜெமினி லேப் நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர் பிரசாத் வாங்க முன்வந்தார். சுசில் கு ப்தாவுக்கும், ஜே.டி.ஏ. நிறுவனத்துக்கும் செலுத்த வேண்டிய 19 கோடி ரூபாயைச் செலுத்துமாறு மனோகரிடம் கேட்டுக் கொண் டார் லதா.

அதன் பேரில், சுசில் குப்தாவை மனோகர் - பிரசாத் தரப்பு அழைத்துப் பேச, “எனக்குச் சேர வேண்டிய ரூ.2.5 கோடியையும் ஜே.டி.ஏ.வுக்குச் சேர வேண்டிய ரூ.16.50 கோடியையும் அனுப்பி விடுங்கள். நான் ஜே.டி.ஏ. நிறுவனத்திடம் பேசி, வட்டியைக் குறைத்து விடுகிறேன்’’ என்று சாமர்த்தியமாகப் பேசி, வங்கி மூலம் (ஆர்.ஜி.டி.எஸ்) பணத்தை சுசில் குப்தா வாங்கி விட்டார். அதன் பிறகும், லதா ரஜினிகாந்திடம் ‘‘மனோகர் பிரசாத் எந்தப் பணத்தையும் தரவில்லை’’ என்று மும்பையில் இருந்தபடியே வட்டி வாங்க முற்பட்டார் சுசில்.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சக்சேனாவும் ஐயப்பனும் சிறைக்குள் போய்விட, சுசில் குப்தா தனது மிரட்டலை குறைத்துக் கொண்டார். ஆனாலும் பணத்தைக் கொடுத்து விடுமாறு நச்சரித்து வந்திருக்கிறார். பணத்தை வாங்க சென்னைக்கு வருமாறு லதா சொன்னால், ‘‘நான் சென்னை ஏர்போர்ட்டிலேயே இருக்கிறேன். வந்து பணத்தைக் கொடுத்துவி ட்டு, டாக்குமெண்ட்டை வாங்கிச் செல்லுங்கள்’’ என்று சுசில் குப்தா சொல்லி வந்தார்.அதற்கு லதா ஒப்புக் கொள்ளவில்லை.

சில தினங்களுக்கு முன்பு லதாவிடம் பணம் கேட்டு சுசில் குப்தா மீண்டும் மிரட்ட, அவரை சென்னைக்கு வரவைத்தி ருக்கிறார் லதா. கடந்த 11-ம் தேதி லதா ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்த அவர், ‘‘வட்டியும் முதலுமாக நான்கு கோடி ரூபாய் தரவில்லை என்றால், செக் பவுன்ஸ் கேஸ் வாரண்ட் வாங்கி வந்து உங்கள் குடும்ப மானத்தை வாங்கி விடுவேன்’’ என்று மிரட்டத் தொடங்கினார். சுசில் இப்படி மிரட்டுவார் என்று முன்பே தெரிந்து, தேனாம்பேட்டை போலீஸுக்கு லதா சார்பில் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக போலீஸிடம் சிக்கி இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார் சுசில் குப்தா.

போலீஸ் பிடியில் சுசில் குப்தா சிக்கியதும் ‘‘நான் யார் தெரியுமா? மும்பையில் ‘கான்’ நடிகர்களுக்கு ஃபைனான்ஸ் செய்பவன். நான்தான் அவர்களுக்கு கூலியை நிர்ணயிப்பவன். என்னைக் கைது செய்தால் மும்பை திரையுலகமே முடங்கிவிடும்’’ என்று மிரட்டியுள்ளார். சிறைக்குப் போன அடுத்த நாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் சுசில் குப்தா.
சுசில் குப்தா மீது இன்னும் சில வழக்குகள் பாயும் என்று போலீஸார் தெரிவித்தனர். அத்துடன் அலுவலகத் தாக்குதலில் சக்சேனாவும் ஐயப்பனும் வளைக்கப்படுவார்கள் என்பது கூடுதல் செய்தி.
thanks kumudam+mani NZ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக