வெள்ளி, 16 செப்டம்பர், 2011

Vasudeva Nanayakara பல்லின மக்கள் இங்கு சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து

இரு அறிவு இனங்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு நல்வழியாகும்

இனப்பிரச்சினைக்கு இப்போது நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற் கான சாதகமான சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தி யிருக்கிறது.
இதனால் மக்கள் இன்று இனப்பிரச்சினையைப் பற்றி அநாவசியமாக சிந்திப்பதற்கு பதில், நாட்டின் அபிவிருத்தி நடவடிக் கைகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்கள் முழுமையான பங் களிப்பை வழங்க வேண்டுமென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பிற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித் துள்ளார்.
இனங்களுக்கிடையிலான நல்லெண்ணம், சமூக உறவுகளை பலப்படுத் தும் ஒரு சாதகமான நிலை விளங்கி வருகின்றது. எங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் இருந்து இந்த உண்மை வெளிப்படுகிறது. எனவே, மொழிக்கும் இனங்களுக்கும் இடையில் நெருக்கமான பிரி க்க முடியாத பந்தம் இருந்து வருகின்றது என்பதற்கு இது சான்று பகர்வதாக அமைந்துள்ளது.
எங்கள் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல்லின மக்கள் இங்கு சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.
நம் நாட்டில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பிரதான மொழிகளே இருக்கின்றன. எங்கள் நாட்டில் மூன்று பிரதான இனங்க ளைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்.
இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே மக்களிடையே இன ஒற்றுமையை கடைப் பிடிக்கக்கூடியதாக இருக்குமென்று இந்நாட்டின் சகல இன மக்களின தும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அமைச்சர் வாசு தேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கள் நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியும், சிங் கள மொழியும் நன்கு தெரிந்திருந்தால் கடந்த காலத்தில் எமது நாட் டில் ஏற்பட்ட அராஜகங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார வீழ்ச் சியும் ஏற்பட்டிருக்காது. எனவே, இரு மொழி அறிவை மக்கள் பெற் றிருந்தால் இந்த நாடு வன்முறைகள், இனங்களுக்கிடையே பகைமை உணர்வு இல்லாத அமைதியான நாடாக மாறுவதை எவரும் தடுக்க முடியாதென்று அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இதற்காக தற்போது இலங்கையில் மொழி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட் டிருப்பதுடன் அரசாங்கம் தேசிய மொழிக் கொள்கையொன்றை அமை த்து அதன் அடிப்படையில் இரு மொழிகளை உத்தியோகபூர்வ மொழி களாக பிரகடனம் செய்திருக்கிறது.
இப்போது அரசாங்கம், இதன் முதல் நடவடிக்கையாக மொழி அறிவைக் கற்பிக்கும் பல நிலையங்களில் அரச ஊழியர்களுக்கு மொழி அறி வைப் புகட்டி வருகின்றது. பொலிஸ் சேவையைச் சேர்ந்தவர்கள், அஞ் சல்துறை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரசாங்கத் திணைக்களங்களில் சேவை புரிபவர்கள் ஆகியோருக்கு சிங்களத்திலும், தமிழிலும் நல்ல தேர்ச்சி இருந்தால் மக்களிடையே தோன்றும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக சுமூகமான தீர்வை ஏற்படுத்த முடியும்.
ஒரு பிரச்சினையுடன் வரும் சிங்கள மொழி அறிவற்ற ஒரு தமிழர் அல் லது முஸ்லிம் பிரஜை பொலிஸ் நிலையத்திற்கோ, அரசாங்க திணை க்கள மொன்றுக்கோ வந்தால் அவர்கள் தன்னுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு பல நாட்கள் செல்கிறது. ஆயினும் இந்த அரச காரியாலயங்களில் இரு மொழி தெரிந்த உத்தியோகத்தர்கள் இருந் தால் ஒரு நொடிப்பொழுதில் இந்த மக்கள் தங்களுடைய பிரச்சினை களுக்கு தீர்வு கண்டு திரும்பி விடலாம்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழி அறிவையும், சிங்கள அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழி அறி வையும் பெற்றுக் கொடுப்பதில் இப்போது தீவிர முயற்சியில் இறங்கி யிருக்கிறார்.
இவ்விரு மொழிகளுடன் அரசாங்க ஊழியர்களுக்கு மட் டுமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் சர்வதேச மொழியான ஆங் கில அறிவையும் மூன்றாவது மொழியாக கற்றுக் கொடுப்பதற்கு அர சாங்கம் இப்போது கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சுகளின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை கொழும்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் இவ்விரு அரசாங்கங்களும் இல ங்கையில் ஆங்கில மொழி பயிற்சி நிலையங்களை நாட்டின் நாலா பக்கங்களிலும் ஏற்படுத்த இருக்கின்றன.
இலங்கையின் சார்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்தியாவின் சார்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் கைச்சாத்திட்டனர். இந்த வைபவத்தில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்திய அரசாங்கம் இத்துடன் 40 இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியா வில் ஆங்கில மொழி பயிற்சியை அளிப்பதற்கும் முன்வந்துள்ளது.
அரசாங்க காரியாலயங்களின் பெயர் பலகைகள், அரச ஆவணங்கள், அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்புகள் சிங்கள மொழியில் மட்டும ன்றி தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டுமென்று அமைச்சர் வாசு தேவ நாணயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடு த்துள்ளார். இதன் மூலம் தமிழ் மக்களும் தாங்களும் இந்நாட்டின் சம உரிமை பெற்ற பிரஜைகள் என்ற நல் எண்ணத்துடன் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை சிங்கள மற்றும் ஏனைய இனத்தவர்களுடன் நற்புறவுடன் மேற்கொள்வதற்கான ஒரு சாதகமான சூழ்நிலை உரு வாகுவது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக