செவ்வாய், 6 செப்டம்பர், 2011

TV நிகழ்ச்சிக்கு பார்த்திபன் கேட்ட ஒரு கோடி!

சின்னத்திரை டாக் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் பார்த்திபன் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டதாக வெளியாகியிருக்கும் செய்திதான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் ஹாட் நியூஸ்.
தினம் தினம் புதிது புதிதாக முளைத்து வரும் சின்னத்திரைகளில் புதுமையான நிகழ்ச்சிகளை புகுத்துவதில் போட்டிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  எப்படியாவது தங்கள் நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டு வர வேண்டும்,    ரசிகர்களை பார்க்க வைத்து விட வேண்டும் என்று டிவி நிறுவனங்கள் போட்டி போட்டி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.
அப்படி புதுமையான டாக் ஷோவை நடத்த முடிவு செய்த சில நிறுவனங்கள், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் பார்த்திபனை அனுகியிருக்கிறது. ஆனால் பார்த்திபன்…. இனிமேல் நம்மை யாரும் தேடி வந்து அழைக்கக் கூடாது என்பதால் கேட்டாரா, அல்லது நிஜமாகவே தேவைப்பட்டதா தெரியவில்லை.
ஒரு எபிசோடுக்கு இரண்டு லட்சம் கொடுங்க என்றாராம்.  ஐம்பது வாரங்களுக்கு தர வேண்டிய பணத்தையும் மொத்தமாக கொடுங்கள் என்று கேட்டது அதைவிட கொடுமை.
பார்த்திபனுக்கு மொத்தமாக ரூ.1 கோடியை கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?  சைலண்ட்டாக இடத்தை காலி செய்து விட்டார்களாம். பார்த்திபன் கேட்ட சம்பளத்தை பார்த்து வாய் பிளந்து நிற்கும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் சிலர், குறைந்த சம்பளத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க தயார் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக