வெள்ளி, 2 செப்டம்பர், 2011

piaggio citroen கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

ஆமதாபாத்: பிரான்சின் பி.எஸ்.ஏ பாஜியோ சிட்ரான் நிறுவனம், குஜராத்தில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னைக்கு அருகில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனத்தின் திடீர் மனமாற்றம், தமிழக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இரு மாதங்களுக்கு முன்பு, பாஜியோ சிட்ரான் நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, கார் தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு உள்ளிட்ட, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை அருகே கார் தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரை சந்தித்த மறுநாளே, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து, அம்மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த இரு மாதங்களாக, பாஜியோ கார் தொழிற்சாலை, எங்கு அமையும் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், இந்நிறுவனம், குஜராத்தின் சனந்த் தொழிற்பேட்டையில் அதன் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, குஜராத் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழகத்தின் வாய்ப்பை, குஜராத் அரசு தட்டிப் பறித்து விட்டதாக, இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சனந்தில் ஏற்கனவே டாட்டா நிறுவனம் அதன் "நானோ' கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. போர்டு மோட்டார்ஸ் நிறுவனமும், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், அங்கு கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது

இம்மாதிரி நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். தமிழகத்தில் தொழிற்சாலை வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? காரியம் நடக்கணுமா, பொட்டி குடு. அதுவும், பிக் மம்மி, லிட்டில் மம்மி, கூட்டணி எதிர்கட்சி ஜால்ரா தலைவர், என்று எத்தனை பேருக்கு பொட்டி கொடுக்கணும்? அதெல்லாம் இல்லாம தமிழ்நாட்டுல வேலை நடக்குமா? அப்படியே இந்த மாதிரி தொழில்வாய்ப்புகள் தட்டிபோனாலும், மக்கள் பெரிதாக கவலைப்பட போவதில்லை. அவர்களை திசை திருப்ப இருக்கவே இருக்கிறது கருணாநிதி மீது வசைமாரி. திமுக மீது ஊழல் வழக்குகள் என்று. இந்த நாடகங்களை எத்தனை முறை பார்த்தாலும் மக்களுக்கு அலுக்கவும் போவதில்லை. கேட்க வேண்டிய எதிர்கட்சிஜால்ரா தலைவர் ஐந்தாண்டுகள் வாயே திறக்க போவதில்லை. அவருக்குத்தான் நோகாமல் கட்டிங் வந்து விடுகிறதே. அது போதுமே. பத்திரிகைகள்? அவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல. தினமலர் மட்டும் ஐயோ வாய்ப்பு போய் விட்டதே என்று அங்கலாய்க்கும். அப்போது கூட கண்டிக்க முடியாது. முதல்வரை விமரிசித்தால் என்ன நடக்கும் என்பது எதிர்கட்சி தலைவருக்கே தெரிந்ததால் தான் ஆறு மாசம் வாய்தா வாங்கி இருக்கிறார்.இந்த வாய்தா மேலும் தொடரும்.அப்படியிருக்க பத்திரிகைகள் என்ன செய்யும்?பாவம்.மக்கள். அவர்களுக்கு இதற்கெல்லாம் ஏது நேரம்? அப்படியே யாராவது கேட்டு விட்டால் அவர் திமுக காரர் என்று வலுக்கட்டாயமாக திமுகவில் சேர்க்கப்படுவார். எதற்கு வீண் வம்பு? இப்படியே ஐந்து வருஷமும் புலம்பி விட்டு போவோம் அது தான் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக