வெள்ளி, 2 செப்டம்பர், 2011

இலங்கையில் Facebook தொடர்பில் 1100 முறைப்பாடுகள்

இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் 1100 முறைப்பாடுகள்
சமூக வலையமைப்புகளில் பரவலாகப் பேசப்படும் பேஸ்புக் இணையத்தளத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் 1100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவின் பிரதான பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் சைபர் க்ரைம் எனப்படும் இணையத்தளக் குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். "பேஸ்புக் கணக்குகளை முடக்குதல், தனி நபர்களால் தரவேற்றப்படும் படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல், தனி நபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துதல், பலவந்தமாகப் பணம் பெறுதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. எமக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தற்போது பேஸ்புக் வலையமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் 'கிறீஸ் மனிதன்' கணக்குகளை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக