சனி, 17 செப்டம்பர், 2011

Earth கலவரத்திற்கு பயந்து எவ்வாறு பலர் மதம் மாறினார்

எர்த் 1947

கருத்து சுதந்திரம் பத்தி பேசுறப்ப கட்டயாம் ரெண்டு பேரோட பெயர்  அடிபடும் ஒருத்தர் ஓவியர் எம்.எப் ஹுசைன் அவர  நாம நாடு கடத்தி அங்க அவர் இறந்ததுக்கப்புறம் இங்க நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்னொருவர் தீபா மேத்தா.தீபா மேத்தாவ அவரோட fire படத்த ரிலீஸ் பண்றப்ப பிரச்சனை  செஞ்சதோட அதுக்கப்புறம் அவரோட water படத்த  இந்தியால  எடுக்கவும்  அனுமதிக்கல.அந்த படத்த ஸ்ரீலங்கால எடுத்து முடிச்சாங்க பின்னாளில்  அது கனடா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.அவுங்களோட அடுத்த படம் எழுத்தாளர்  சல்மான் ருஷ்டியோட நாவல அடிப்படையா வச்சு எடுக்குறாங்க ஆனா இந்த படத்துக்கும் இங்க பிரச்சனை வரலாம்னு மீண்டும் ஸ்ரீலண்காலையே படப்பிடிப்பு நடத்துறாங்க.

                                         
எர்த் 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டதை  பின்புலமாக கொண்ட காதல் கதை.இது ஒரு புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.படத்தில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்போர் இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளி ஆமிர் கான்(சாரி கமல்ஹாசன்),இந்தியாவின் சிறந்த நடிகைகளில்  ஒருவரான நந்திதா தாஸ்,மற்றுமொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அப்போதைய புதுமுகம் ராகுல் கண்ணா.இந்திய மாற்று சினிமாவின் முகங்களில் ஒன்றாக  திகழும் ஷபானா ஆஸ்மியின் குரலுடன் படம் துவங்குகிறது. 

படம் இடம்பெறும் களம் சுதந்திரத்திற்கு முந்தய ஒருங்கிணைந்த இந்தியாவின் லாகூர் நகரம்.வசதியான பார்சி கும்பத்தின் வேலைகாரியாக இந்து மதத்தை சேர்ந்த  நந்திதா தாஸ் நடித்திருக்கிறார்.இந்த முக்கோண காதல் கதையில் வரும் மற்ற இருவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஐஸ்வண்டிக்காரராக வரும் ஆமீரும்,அதே இஸ்லாம் மதத்தை சேர்ந்த ராகுல் கண்ணாவும்.படத்தின் திரைக்கதை  பார்சி குடும்பத்தை சேர்ந்த குழந்தை தான் பெரியவளானதும் நடந்ததை நினைவுகூருவதாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் மிகச்சுருக்கம் இங்கே

இந்திய-பாகிஸ்தான் பிரிவினை எவ்வாறு இம்மூவரின்  வாழ்கையும்  புரட்டிப்போடுகிறது என்பதே கதை. பிரிவினையின் போது அதுவரை ஒற்றுமையாக இருந்த சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்களிடையே வேற்றுமை எழுகிறது.இதன்  விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.ராகுல் கண்ணா நந்திதா தாஸ் இடையே நிலவும் காதலை பொறுத்துக்கொள்ளமுடியாத ஆமீரால் ராகுல் கண்ணாவும் நந்திதா தாசும்   இஸ்லாமிய நண்பர்களால் கொல்லப்படுகின்றனர்.அமீரின் நடிப்பு அபாரம் இந்த மனுஷனால மட்டும் எப்படி எல்லா விதமான பாத்திரத்திலும் அபாரமா நடிக்க முடியுதுன்னு தெரியல.கலைஞன்ட நீ!!!  
                                            

என்ன தான் காதல் கதையாக  இருந்தாலும் வரலாறும் சரிபங்கில்சொல்லப்பட்டுள்ளது.கலவரத்திற்கு பயந்து எவ்வாறு பலர் மதம் மாறினார் ,தன்னுடைய தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது எவ்வளவு வருத்தத்தையும் கணத்தையும் தருகிறது என்பதும் அழுத்தம்  திருத்தமாக  சொல்லப்பட்டுள்ளது.படத்திற்கு இசை இசைப்புயல் ரஹ்மான்  பின்னணி இசை சோகத்தையும் பதற்றத்தையும் சரியாக வெளிபடுத்துகிறது.இந்த படம் அனைவரும்  கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.வரலாற்றிலேயே அதிகமாக  மக்கள் தங்களது நாட்டையும்  சொந்தங்களையும் விட்டு விட்டு இடம்மாறிய  சோகம் அரங்கேறிய சம்பவத்தின் அழுத்தமான பதிவு .

 எனக்கு இன்றும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடும் போது தோன்றும்  ஒரு நப்பாசை அக்ரமும் சச்சினும் அன்வரும் கங்குலியும் ஒரே அணியில் விளையாடியிருந்தால் எப்படி இருக்குமென்று !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக