சனி, 17 செப்டம்பர், 2011

Hot news அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை : மதுரை- ஈரோட்டில் போட்டியிட முடிவு

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்கிற முடிவில், மாநகராட்சி மேயர் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க.,வினர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.    அதிமுக சார்பில் ஓ.பி.பன்னீசெல்வமும், தேமுதிக சார்பில் பன்ருட்டி ராமச்சந்திரன் பேசிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மதுரை மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு தேமுதிக போட்டியிட விரும்புவதாகவும், ஈரோட்டை தேமுதிகவுக்கு ஒதுக்குவதற்கு அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது என்றும்,

மதுரையை தேமுதிகவுக்கு ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக