ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஒரிசா எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்


புவனேஸ்வரம், செப்.24: ஒரிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வும், அவரது மெய்க்காப்பளர் ஒருவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  ஓரிசாவில் நவரங்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட உம்மர்கோட் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜகபந்து மாஜி(39). இவர் வெள்ளிக்கிழமை தனது தொகுதியை சேர்ந்த கோனா என்ற கிராமத்தில் பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.  இந்த கிராமம் சத்தீஸ்கர் மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது.  அப்போது ஆயுதம் ஏந்தி, முகமூடி அணிந்து வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 4 பேர் எம்.எல்.ஏ.வை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ.வும், அவரது மெய்க்காப்பாளரும் உயிரிழந்தனர்.  எம்எல்ஏ-வை சுட்ட பின்னர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.  இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எம்எல்ஏ, மெய்க்காப்பாளர் ஆகியோரது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து ரெய்ஹர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் நடந்த கிராமம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.  சம்பவம் காரணமாக கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதால் அங்கு ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் போலீஸôர் அங்கு ரோந்து சுற்றி வருகின்றனர்.  இப்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அங்கு முகாமிட்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக