செவ்வாய், 13 செப்டம்பர், 2011

யாழில் ரொபர்ட் ஓ பிளேக்! சிவில் சமூக – அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இன்று யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, யாழ்க்குடா நாட்டின் மீள் குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடன் இந்த விடயம் குறித்து அவர் கலந்துரையாடியதுடன் இங்கு ஏன் மீள்குடியேற்றப் பணிகள் இவ்வளவு தாமதாக இடம்பெறுகின்றன என வினாவும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை அரச சார்பற்ற ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்த அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தையும் சந்திக்க உள்ளதாக குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் றொபேட் ஓ பிளக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் யாழ் நகர அமெரிக்கன் கோணர் பகுதியில் நடத்தப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து வண்டிகளில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் ஏற்றி இறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக