ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

புலிகள்: பயங்கரவாதிகளா அல்லது விடுதலைப் போராளிகளா – டச்சு நீதிமன்றம் முடிவு செய்யும்


-  றிச்சட் வோக்கர்
netherland justiceபிரிவினைவாத தமிழ் புலிகளுக்கு அல்லது எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஆதரவு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு ஐந்து ஸ்ரீலங்கா வாசிகள் வியாழக்கிழமை ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்கு உட்படவிருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு சாத்தியமான தண்டனை வழங்குவது, ஸ்ரீலங்காவில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்தத்தில் யார் சரி அல்லது யார் பிழை என்பதை முடிவு செய்யும் பனித்தொடர் போன்ற சிக்கலான முனை, ஸ்ரீலங்காவில் நடந்த விடயங்களைப் புரிந்து கொள்வதிலேயே உள்ளது.
மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய யுத்தம் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கை நாசம் செய்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழ் புலம் பெயாந்தவர்களில் முக்கியமான ஒரு பகுதியினர், அதற்கு ஆதரவான பங்கினை வழங்குவதில் தம்மை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டனர். தமிழ் தலைவர்களின் அதற்கான மிகமுக்கிய பணிகளில் ஒன்றாகவிருந்தது  நிதி சேகரிப்பு. இந்தக் குழுக்களிடமிருந்து பெருகிப்பாயும் மில்லியன் கணக்கிலான டொலர்கள்தான், ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்துக்கு எதிராகப் போராட எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு போதுமானளவு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள உதவியது.
நெதர்லாந்தில் நடைபெறும் தமிழ்க் கூட்டங்களை ஒரு டச்சு காவல்துறைப் புலனாய்வுக் குழுவினர் கண்காணித்து வந்தார்கள். அதன் விளைவாக தயாரிக்கப்பட்ட “கொனிக் செயல் திட்டம் “ எனும் தலைப்பிலான அறிக்கை தமிழ் ஈழம் என அழைக்கப்படும் தனிநாட்டை ஸ்ரீலங்காவில் உருவாக்குவதற்கான அவர்களின் இலக்கினை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட இறுதி யுத்தத்தை நடத்துவதற்காக சில குறிப்பிட்ட தமிழர்கள் எவ்வாறு நிதி சேகரித்தார்கள் என்பதை விளக்குகிறது. எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தைத் தொடர்ந்து இதில் எஞ்சியது வெறும் கனவைத்தவிர வேறு எதுவுமில்லை, அத்தோடு இந்த இராணுவப் போராட்டமானது 2009ம் ஆண்டின் வசந்தகாலத்தோடு ஒரு முடிவுக்கும் வந்தது. கொனிக் செயல் திட்டம் இறுதியாக பல டச் தமிழர்களைக் கைது செய்வதற்கும் வழிவகுத்தது. அவர்களில் ஐந்துபேர் இப்போது ஹேக்;கில் உள்ள ஒரு விசேட யுத்தக் குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்பு
இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பயங்கரவாத நோக்கங்களுடன் ஒரு குற்றவியல் அமைப்பின் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு அதற்காக நிதி சேகரித்தார்கள் என்பதே. குற்றத்தின் முதல் பகுதியானது, எல்.ரீ.ரீ.ஈ என்பது என்ன மற்றும் அது என்ன செய்தது என்பதே.
 அரசாங்க தரப்பு வழக்குத் தொடுனர்கள் அது குண்டுத் தாக்குதல்களையும் மற்றும் கொலைகளையும் புரிந்து பொதுமக்களை அச்சுறுத்த முயன்றது என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நீதிமன்றமானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐ.சி.சி) போல ஒரு சர்வதேச அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, அது ஒரு ஒழுங்கான உள்நாட்டு டச்சுக் குற்றவியல் நீதிமன்றம் ஆகும் - மற்றும் அதன் வழக்குத் தொடுனர்கள் டச் அரசின் உலகளாவிய அதிகார வரம்புகளின் கீழேயே பணியாற்றுகிறார்கள்
இப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஹேக்கைச் சேர்ந்த 46 வயதான ஆர்.சிறீரங்கம் என்பவர் ஆவார். அவர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே நெதர்லாந்துக்கு ஓடி வந்தவராவார். மற்றும் அவர் தமிழ் புலிகளின் டச்சுப் பிரிவின் தலைவர் என்றும் நம்பப் படுகிறது.
சிறீரங்கம் தரப்பு வழக்கறிஞர் ஆன விக்டர் கொப்பே சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் எல்.ரீ.ரீ.ஈயினை உட்படுத்தியிருப்பதை அகற்ற வேணடும் என்று சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கும் ஹேக்கில் தற்சமயம் நடைபெற்று வரும் வழக்கிற்கும் உள்ள தொடர்பு மிகவும் தெளிவான ஒன்று – தடையை அகற்றுவதும் மற்றும் டச்சு தொடர்ந்திருக்கும் வழக்கும் வௌ;வேறானவை. தடையை அகற்றும் செயல்  போதுமானளவு விரைவில் இந்த வழக்கின்மீது தாகக்த்தை ஏற்படுத்துமா என்பதும் nதிவில்லாமலே உள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபிப்பதும் சற்றுக் கடினமானது. இந்த வழக்கில் விக்டர் கொப்பேக்கு  உதவி புரிந்து வரும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர், தமரா புரூமா விளக்குகையில் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முதலாவது பகுதியான  நிதி சேகரிப்பது அத்தனை கடினமான ஒன்றல்ல ஆனால் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்காவில் என்ன செய்கிறது என்பதை, கவனிப்பதில்தான் அதன் தன்மை தங்கியுள்ளது. அதனால்தான் அவாகள் பணம் கொடுத்தார்களா இல்லையா என்பது எங்களது பிரதான விடயமாக இருக்கப் போவதில்லை. அதுவல்ல உண்மையான  கேள்வி : எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத அமைப்பா அல்லது அவர்கள் சுதந்திரப் போராளிகளா என்பதுதான்  என அவர் தெரிவித்தார்.
நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியது எல்.ரீ.ரீ.ஈ செய்தவைகள் மற்றும் செய்கின்றவைகள் யாவும் டச்சுக் குற்றவியல் சட்டங்களின் கீழ்; பயங்கரவாதங்களா என்பதைத்தான்.  மற்றும் பிரதிவாதிகள் தரப்பு விவாதிக்க வேண்டியது ஐரோப்பிய ஒன்றிய பட்டியலின் கீழ் அரசியல் ரீதியாக அது இழுத்து வரப்பட்டிருப்பது அதைத் தண்டிக்கப் போதுமானதா  என்பதையே.
டச்சு காவல்துறையினரின் அறிக்கையின்படி டச் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் வருடத்துக்கு  2000 யுரோக்களை நன்கொடையாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான காரணம் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் பகுதிகளுக்கு அவர்கள் செல்வதற்கு வேண்டிய வழிகளுக்கான கட்டணம் எனக் கூறப்பட்டது. அப்படி அவர்கள் அதை வழங்கத் தவறும் பட்சத்தில் இன்னமும் ஸ்ரீலங்காவில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் தீவிரமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிடுவது இந்த நன்கொடைகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டன என்றும் அவை நேரடியாகத் தமிழ் அமைப்புக்கு வழங்கப்படவில்லை என்றும். ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈ யானது பல வருடங்களாக ஒரு நிருவாகத்துக்குப் பொறுப்பான நடைமுறையில் இருந்தபடியால், அது சுகாதாரம், இராணுவப் பயிற்சிப் பாடசாலைகள், மற்றும் துண்டுகள் தயாரித்தல் போன்ற பல விடயங்களுக்கு நிதியை செலவிட்டுள்ளது. எந்தப்பணம் எந்த விடயத்திற்;கு செலவழிக்கப்பட்டது என்பதை வகைப்படுத்திக் காண்பது பிரச்சனையான விடயம்.
பிரதிவாதிகள் தரப்பு தெரிவிப்பது, அவர்கள் பணத்தை நேரடியாக  எல்.ரீ.ரீ.ஈ யினரிடத்தில் வழங்கியிருந்தால்கூட அது ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல எப்படியாயினும் அது ஒரு விடுதலை இயக்கம் என்று.
ஒரு மனிதருக்கு விடுதலைப் போராளியாக இருப்பவர் மற்றொருவருக்கு பயங்கரவாதியாகிறார்
ஸ்ரீலங்காவில் நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் தமிழ் புலிகள் என்னவாயிருந்தார்கள், என்ன பங்கினை வகித்தார்கள், என்பதை எப்படி விளக்குவது?. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை எல்.ரீ.ரீ.ஈ சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் முதல் சிறுவர் போராளிகள் வரையான  ஒவ்வொரு சட்டபூர்வமற்ற போர் முறைகளையும் பயன்படுத்தி இரக்கமற்ற பயங்கரவாத பிரச்சாரம் புரிந்த ஒரு அமைப்பாகும். ஆனால் பெரும்பாலான தமிழர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ என்பது அவர்கள் ஒருபோதும் கண்டிராத அளவுக்கு தமிழ் தாய்நாட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு சட்டபூர்வ அரசாங்கத்தைப் போலுள்ள  ஒரு அமைப்பு.
இந்த வழக்கின் முதலாவது விசாரணை நாளை த ஹேக்கில் நடக்க இருக்கிறது. இதன் பிறகு நீதிமன்றத்துக்கு தமிழ் புலிகள்  பயங்கரவாதிகளா அல்லது ஒரு விடுதலைப் படையினரா என்பதை முடிவு செய்ய மூன்று வாரகால அவகாசம் உள்ளது.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக