வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஆசிரியை அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி போராட்டம்


மாணவர்களை அடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இன்னும் நமது நாடுகளில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

சென்னை: ஆசிரியை அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோரும், உறவினரும் சென்னையி்ல சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இஎல்எம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் ஜான்சன். இவர் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர் படித்து வந்த பள்ளி ஆசிரியை நித்யாதான் காரணம் என்று கூறி இன்று பள்ளி முன்பு பெற்றோரும், உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜான்சனின் தாயார் அன்னபுஷ்பம் கூறுகையில், எனது மகன் ஆசிரியை நித்யாவின் செல்போனை திருடி விட்டதாக கூறி குற்றம் சுமத்தியுள்ளனர். பின்னர் ஆசிரியை நித்யாவும், ஆசிரியர் ரஞ்சித் என்பவரும் பள்ளி மாடியில் வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், 3 மணி நேரம் முட்டி போட வைத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த எனது மகன் வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து விட்டான். ஆசிரியை நித்யா, ஆசிரியர் ரஞ்சித்தான் எனது மகனின் சாவுக்குக் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் ஆசிரியர்கள் அடித்ததால் மாணவன் ஜான்சன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக