புதன், 14 செப்டம்பர், 2011

பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே ?ஜி.வி.பிரகாஷின் காப்பி

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் மயக்கம் என்ன படத்தோடு ஜி.வி.பிரகாஷின் உறவை முறித்துக் கொள்ளும் முடிவிலிருக்கிறாராம் செல்வராகவன். அடுத்து ஆர்யா-அனுஷ்கா நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை புக் பண்ணியிருக்கிறாராம். தெய்வ திருமகள் விஜய்யும் தன் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜைதான் நாடியிருக்கிறார்.

ஆடுகளம், தெய்வ திருமகள் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அப்பட்டமான காப்பி என்பதை இணையதள பயன்பாட்டாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே என்ற நிருபர்களின் கேள்விக்கு பிரகாஷ் சொன்ன ஒரு பதில்தான் இவ்விருவரையும் இந்த முடிவெடுக்க வைத்ததோ என்னவோ?
நான் சொந்தமாக ட்யூன் போட தயாராதான் இருந்தேன். ஆனால் விஜய்யும், வெற்றிமாறனும்தான் இந்த பாட்டு வேணும்னு வந்து கேட்டாங்க. அதை அப்படியே போட்டுக் கொடுத்தேன் என்று கூறியிருந்தார் அவர்.
வெற்றிமாறன் எப்படியோ? பிரகாஷின் ஃபேஸ்புக்கில் இப்போது இருவரின் இடம்தான் ‘லாஸ் லுக்’ ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக