ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மானங்கெட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் பாண்டியனும் அளவற்ற அடிமைத்தனம்



அது அவர்களது (அதிமுக) முழக்கம். தொடர்ந்து பேசுவது எங்களது வழக்கம்: தா.பாண்டியன்



அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.  பழனிச்சாமி 24.09.2011 அன்று பகல் 12.30 மணியில் இருந்து 3 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் நடந்த விவரங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய செயலாளர் டி.ராஜா, ஆர்.நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோருடன் எடுத்துக் கூறினார். அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: அ.தி.மு.க.வுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?

பதில்: எங்கள் கட்சியின் கருத்துகளை நாங்கள் அ.தி.மு.க. தலைமைக்கு தெரிவித்திருக்கிறோம். பேச்சுவார்த்தை தொடர்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் இறுதி முடிவு தெரியும்.
கேள்வி:  எத்தனை நகராட்சி, எத்தனை மாநகராட்சி கேட்டு உள்ளீர்கள்?
பதில்:  கேட்கவேண்டிய இடத்தை கேட்டு இருக்கிறோம்.
கேள்வி:  அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதே?
பதில்:  உள்ளாட்சி தேர்தலில் எங்களது வேட்பாளர்களும் தமிழ்நாடு முழுவதும் போட்டியிட தயாராக இருக்கிறார்கள்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்டு இன்னும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கிறதே?
பதில்: தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதுவரை அறிவிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடனும் பேசிவருகிறோம். நாளை மாலை முடிவு தெரியும்
கேள்வி: கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளை கலந்து பேசாமல் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தது. அதேபோல உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி கட்சிகளை கலந்து பேசாமல் வேட்பாளர்களை அறிவித்துள்ளதே?
பதில்: அது அவர்களது முழக்கம். தொடர்ந்து பேசுவது எங்களது வழக்கம்.
கேள்வி: கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அலுவலகம் சென்று கூட்டணி குறித்து பேச்சுவார்தை நடத்தினீர்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வுடன் ஏன் பேசவில்லை?
பதில்: தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் அது போன்ற நிபந்தனை இப்போது இல்லை.
கேள்வி: அ.தி.மு.க. நடந்து கொள்ளும்விதம் எந்த அளவுக்கு கூட்டணி தர்மம் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: எது கூட்டணி தர்மம் என்ற உயர்ந்த சொற்களை எல்லாம் பயன்படுத்த விரும்பவில்லை. இது கூட்டணி அரசியல். பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது எங்கள் கருத்து அல்ல.
கேள்வி: திருச்சி இடைத்தேர்தலில் என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள்?
பதில்: இதுபற்றி அ.தி.மு.க. எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதற்கு நாங்கள் உரிய பதில் கொடுப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக