ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

யாழ்.ஆலயங்களில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு!

யாழ்.குடாநாட்டில் ஆலயங்களில் திருடப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் ஆலயங்களில் இடம் பெற்ற பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்பட்ட பொருட்களும் சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இணுவில் பகுதியில் உள்ள பிரபல்யமான கந்தசுவாமி கோவிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களால் திருடர்கள் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.
சுன்னாகம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஆறுபேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களால் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இருந்து திருடப்பட்ட பல வெண்கலப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.
களவுகளுடன் தொடர்புடையவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டாரா ,குற்றவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ண, பொலிஸ் சார்ஜன்ட் தம்மிட்ட ,பொலிஸ் கான்ஸ்டபிள்களான கோபிகிருஸ்ணா யுவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் கைது செய்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக