ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

புலம்பெயர்ந்தோரின் காணிகளை உறுதிப்படுத்த புதிய விண்ணப்பப் படிவம்: ஜனக்க

வடக்கு கிழக்கில் காணி உரித்துடைய புலம்பெயர்ந்தவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த விண்ணப்பப் படிவம் இன்று அல்லது நாளை வெளியிடப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதி களில் காணிகள் அளக்கப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

"மஹிந்த சிந்தனை' திட்டத்தின் கீழ் காணி உரிமைப்படுத்தவும் நாட்டிற்கான காணிப் பலத்தை ஸ்திரப்படுத்தவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அளக்கப்பட்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இது வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்களின் காணிகளை அளப்பதற்காக அவர்கக்காக புதிய விண்ணப்பப் படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன் ஊடாக அவர்கள் தங்களுடைய காணிகளை அளப்பதற்கும், எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவும் முடியும். அந்த விண் ணப்பத்திற்கான விபரத்தை அவர்கள் இணை யத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த புதிய விண்ணப்பம் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். அந்த விண்ணப் பத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் விண்ணப் பதாரிக்கு எதிராக ஆட்சேபனைக் காலமாக இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்படும்.

காணிகள் அளக்கப்பட்டு எல்லை நிர்ணயிக்கும் நடவடிக்கையின் முதற் கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள் ளப்பட்டு வருவதனால் இதனை முழுமையாக செய்து முடிக்க நீண்டகாலம் தேவைப்ப டுகிறது என்றார்.

இந்த நிலையில் "மஹிந்த சிந்தனை' திட் டத்தின் கீழ் காணி உரிமையைப்பலப்படுத் தவும், நாட்டிற்கான காணிப்பலத்தை ஸ்திரப் படுத்தவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் "பிம் சவிய' வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டமானது 1998ஆம் ஆண்டின் உறுதிப்பதிவுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2007 முதல் ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் காணிகள் அளக்கப்பட்டும், எல்லைகள், நிர்ணயிக்கப்பட்டும் உரிமம் உறுதிப்படுத்தப்பட்டும், இலவசமாக உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் இப் பணியை செய்து முடிப்பதே பிரதான இலக்கு என காணி மற்றும் காணி அபி விருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, புலம் பெயர்ந்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விண்ணப் பம் தொடர்பான விபரத்தை தீதீதீ.ஞடிட்ண்ச்திடிதூச்.ஞ்ணிதி.டூடு இன் ஊடாக விண்ணப் பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக