புதன், 28 செப்டம்பர், 2011

இலங்கை அரிசி ஏற்றுமதி செய்கிறது முதலில் கென்யாவுக்கு

முதன்முறையாக இலங்கை ஆப்பிரிக்க நாடான கென்னியாவிற்கு 250 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்யவுள்ளது.
வியாங்கொட களஞ்சியசாலையில் உள்ள அரிசி இருப்பே இவ்வாறு கென்னியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இலங்கையில் அரிசி இருப்பில் உள்ளதால் அதனை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

மேலும் இருப்பில் உள்ள அரிசி சவுதி ஆரேபியா உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக