புதன், 7 செப்டம்பர், 2011

ஆழ்துளை கிணறில் சிக்கி தவிக்கும் சிறுவன்: பாறையை உடைக்கும் ரிக் மெஷினை



நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ளது சவளக்காரன் குளம். அதன் அருகே உள்ள கைலாசம் நாதபுரத்தில் ஒரு சுடலை மாட கோயில் உள்ளது. அதன் அருகில் நேற்று 200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அதனை ஒரு சாக்கை வைத்து மூடிவிட்டு சென்றனர்.
இன்று காலை 11 மணி அளவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சேர்மேன் நாடார் மகன் 3 வயது சுதர்சதன். இந்த சிறுவன் அந்த சாக்கை திறந்து பார்த்ததில் திடீரென சறுக்கி உள்ளே விழுந்தான்.
சில நொடிகளில் இந்த விபரம் தெரிய வரவே, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், டிஎஸ்பி உள்பட அந்த இடத்தில் முகாமிட்டு சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஸ்கேன் செய்ததில் சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.
சிறுவனை மீட்பதற்காக மற்றொரு ஆழ்துளை கிணறு போடப்பட்டபோது, 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது பாறையை உடைக்கும் ரிக் மெஷினை கொண்டு வந்து சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக