வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வடிவேலு:‘தொழிலைப் பாருய்யா’ன்னு தலைவரே சொல்லிட்டாரு!

  ‘‘உஷ்ஷ்...... ஓய்வுதான்! மூணு மாசம் ஓய்வு எடுத்தாச்சு! இனி சினிமாவில் அதிரடியாக இறங்கப்போறேன்! ரெண்டு பெரிய டைரக்டர்கள் ஒன் லைன் கதை சொல்லி இ ருக்காங்க! பெரிய ஹீரோவுடன் சேர்ந்து செய்யப்போறேன்!’’

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்குப் போகவில்லையா?

‘ஏன் இந்தக் கொலைவெறி?’ என்பது போல் நம்மை ஒரு மாதிரி பார்த்தார். ‘‘என்னோட முழுக்கவனமும் இனி தொழிலில்தான்! இந்த வடிவேலு காமெடிதானே இன்னமும் வீடு, வீடா ஓடிக்கிட்டிருக்கு! ‘தொழிலைப் பாருய்யா’ன்னு தலைவரே சொல்லிட்டாரு! அதனால் இனி சினிமாதான்! நானும் மிகப் பெரிய இயக்குநரும் மறுபடியும் ஒண்ணா சேரப் போறோம். அதுக்கான கதையைப் பத்திதான் பேசிக்கிட்டிருக்கிறோம். சீக்கிரமே அறிவிப்பு வரும்! எனக்கு யாரும் விரோதி இல்லை! ஆனா என்னை விரோதியா நினைக்கிறவங்களோடு கைகுலுக்கமாட்டேன்! இதாங்க என்னோட பாயிண்டு! ஆளை விடுங்க!’’ என்று சிரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக